சண்டையை வெல்லாமல் தான் நேசிக்கும் தலைவரின் முகத்தை பார்க்கமாட்டேன் என்றிருந்த எங்கள் வீரத்தளபதியையும் போராளிகளையும் தமிழினம் மறைந்துவிடுமா?
2008ஆம் ஆண்டு சித்திரை மாதம் இரண்டு சிறிய வலிந்து தாக்குதல்கள் சொர்ணம் அன்ணரின் தலைமையில் தமிழர் தாயகத்தின் இதய பூமியாகிய மணலாறில் மேற்கொள்ளப்பட்டது.
ஒன்று சித்திரை 27ஆம் தேதியும் மற்றையது சித்திரை 29 ஆம் தேதியிலுமாக இரண்டு தாக்குதல்கள்.
இரண்டுமே நாம் எதிர்பார்த்த வெற்றியை எமக்கு அளிக்கவில்லை.
மூன்றாவது நாளும் தமது முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற அச்சங்கொண்ட எதிரி அன்றிரவு எதிரி காடே அதிரும் வண்ணம் பயங்கர எறிகணைத் தாக்குதல் நாடாத்தினான் அதில் சொர்ணம் அண்ணர் விழுப்புண் அடைந்தார்.
தாக்குதல் எதிர்பார்த்தளவு பலனளிக்காத காரணத்தால் சிகிச்சைபெற வைத்தியசாலைக்கு செல்லமறுத்துவிட்டார்.
மருத்துவப் பொறுப்பாளர் திரு.இ.இரேகா அவர்களும்
அங்கிருந்த மூத்த போராளிகள் எவ்வளவு ஆலோசனை சொல்லியும் மூத்ததளபதி கேட்கவில்லை,மாறாக அவரது கண்கள் இரத்தச் சிவப்பாக மாறியது.
இப்போது எனது தடவை
நெஞ்சில் உள்ள துணிவு எல்லாத்தையும் வரவழைத்து என்னைத் திடப்படுத்திக்கொண்டு புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்குச் செல்லலாம்.
அங்கே Dr.சிவபாலன் அவர்களைக்கொண்டு
உடலில் உள்ள எரிகணைச் சிதறல்களை
(Foreign Body removal) அகற்றிவிட்டு உடனடியாகவே களமுனைக்குத் திரும்பலாம் என்றேன்.
எனது இந்த ஆலோசனைக்காக என் மீதும் பெரும் எரிந்து விழுந்தார்.
என்னை அவரது கட்டளைப்பீடம் அமைந்திருந்த ஜீவன் தங்ககத்தில் தொடர்ந்து நிற்க அனுமதிக்கவும் இல்லை.
பச்சையாகச் சொல்வதானால் துரத்தியேவிட்டார்!….!🥲
சிறிது நேரம் கழித்து என்னை மீண்டும் அழைத்தார்.
“தனக்கு அங்கேயே வைத்து சிகிச்சியளிக்கமுடியாதா?” என்று கேட்டார்.”
யான் தயங்கினேன், சிகிச்சைக்குரிய உபகரணங்கள் இல்லையென மறுத்தேன்.
ஆனால் அவரோ எதையுமே கேட்கவில்லை மீண்டும் கேட்டார் இப்போது ரேகா அன்ணரின் முகத்தைப் பார்த்தேன்.
தலையை அசைத்ததுடன் அதற்குரிய சத்திரசிகிச்சை உபகரணங்களையும் மயக்க மருந்துகளையும் (Surgical Instruments, Medicines) புதுக்குடியிருப்பிலிருந்து உடனடியாகவே பெற்றுத்தந்தார்.
சண்டையை வெல்லாமல் தான் நேசிக்கும் தலைவரின் முகத்தை பார்க்கமாட்டேன் என்றிருந்த எங்கள் வீரத்தளபதியையும் போராளிகளையும் தமிழினம் மறைந்துவிடுமா?
தமிழினத்தின் மூத்ததளபதியின் வரலாறு மிகவும் பெரியது.
பல பக்கங்களைக் கொண்டது.
அதில் சில வசனங்களை மட்டும் பதிவு செய்துள்ளேன்.
அந்த வீரத்திலகத்தின் வரலாறை யாரும் எழுத முன்வந்தால் மேலும் சில வசனங்களை சொல்ல சித்தமாகவுள்ளேன்!
வீரவணக்கம்
சொர்ணம் அண்ணை!🎖