நறுக்கிய காய்களை அம்மா பாத்திரத்தில் இட்டாள். மூட்டிய அடுப்பில் பாத்திரத்தை வைத்தாள். சற்று நேரத்தில் தண்ணீரின் தாளத்துக்கு காய்கள் நடனமாடத் தொடங்கின.
ஒவ்வொரு காயும் ஒவ்வொரு விதமான பாடலுடன் ஆடலைத் தந்தன. இதனைப் பார்த்துக்கொண்டிருந்தோர் பரவடமாயினர். சிறிது நேரத்தில் அம்மா அடுப்பை அணைத்தார். காய்கள் அடங்கின.
ஆம்.. காய்களின் ஆட்டத்துக்கு சக்தியை வழங்கியது அடுப்பிலிருந்த நெருப்பே ஆகும். நெருப்பு தந்த வெப்ப சக்தியே காய்களை இயக்கியது.
இதே போல் நமக்குள் உள்ள இறை சக்தி காரணமாகவே நாமும் இயங்குகின்றோம். செயலாற்றுகின்றோம். இயை அறியாமல் நாமே இயங்குவதாக, நாமே செயலாற்றுவதாக எண்ணுகின்றோம்.