குறும்புக்காரக் குரங்கு – 1

140

முன்னொரு காலத்தில ஒரு ஊரு இருந்தது. அந்த ஊரில ஒரு விவசாயி வெள்ளரித் தோட்டம் வச்சிருந்தான்.

அந்தத் தோட்டது வெள்ளரிக்காய் மிகவும் ருசியாக இருக்கும். தினம் தினம் தன்னால சுமக்க முடிந்த அளவுக்கு வெள்ளரிப் பிஞ்சுகளையும், வெள்ளரிப் பழங்களையும் பறித்து ஒவ்வொரு ஊரா போய் விற்று பிழைச்சு வந்தான்.

சுட்டிக் குரங்கு ஒண்ணு பக்கத்திலிருந்த மலைப் பிரதேசத்தில் இருந்து ஊரு பக்கம் வந்தது. வெள்ளரித் தோட்டத்தைக் கண்டதும் அதுக்கு ரொம்பவும் நாக்கில எச்சில் ஊறிச்சு..

விவசாயி வேற சந்தைக்குப் போயிட்டானா, குரங்கு இஷ்டத்துக்கு வெள்ளரித் தோட்டத்தில விளையாட ஆரம்பிச்சிருச்சி..

அது பிஞ்சா இருந்த வெள்ளரிக்காய்கள் ரொம்ப ருசியா இருக்கவே அதையெல்லாம் பறிச்சு சாப்பிட்டது… அதுக்கப்புறம் ஆய் போயிட்டு முத்தலா இருந்த காய்கள் மேல துடைச்சிகிட்டு ஓடிருச்சி.

அடுத்த நாள் தோட்டத்துக்கு வந்த விவசாயிக்கு பயங்கர அதிர்ச்சி.. தோட்டத்தைச் சுத்தம் செய்யவே மதியம் ஆயிட்டது..

அன்னிக்கு மாலை தோட்டத்துக்கு வந்த குரங்கு அதே மாதிரி செஞ்சது..

தோட்டக்காரனுக்கு கோபம் கோபமா வந்தது. இதைச் செய்யற குரங்கை தண்டிக்கணும் அப்படின்னு முடிவு பண்ணினான்.

அதுக்கு ஒரு திட்டமும் போட்டான்.