உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்

1863 ம் ஆண்டு இதனை உருவாக்கியவர்”#ஹென்றி_டுனான்ட்”அவர்களாவார்!



உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8ஆம் நாளில் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான Henry Dunant அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாளில் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது. 



யாழ்ப்பாணக் குடாநாடு தமிழர்களின் நிழல் அரசின் ஆளுகைக்குள் இருந்த நேரம் யாழ்/போதான வைத்தியசாலைக்கு 
ICRC யினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.



வைத்தியசாலையை மையப்படுத்தி சில மீட்டர்கள் வரை அந்த பாதுகாப்பு வலயம்(Safety Zone) இருந்தது.

இரு தரப்புடனும் இறுக்கமாகப் பேசி சர்வதேச போர் நியமங்களுக்கு ஏற்ப ஓர் பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்தினர். 

புலிகள் வைத்தியசாலைக்குள் ஆயுதங்களுடன் செல்லமுடியாது. ஏன் சீருடைகளுடன் கூட செல்லமுடியாது.

பாதுகாப்பு வலய எல்லையை வகுத்து அதனை படைத்தரப்பினரிடமும் வழங்கியிருந்தனர்.


இரவில் அதன் எல்லைகளை Red Cross சின்னத்தின் மீது ஒளிரும் விளக்குகள் காட்டிநின்றன. 



அப்பாவித் தமிழர்களுக்கு வில்லங்கம் தரும் உலங்கு வானுர்திகள்,வில்லன்களாக விண்ணில் கழுகுக் கண்களுடன் நேரமும் சுற்றித் திரியும் வேவுவிமானங்கள், போர்விமானங்கள் போன்றவற்றிக்கு நன்கு தெரியக்கூடிய விதத்தில் அவை அமைக்கப்பட்டிருக்கும். 



பாதுகாப்பு வலய எல்லைகளில் சில நேரங்களில் வான்வழித்தாக்குதல்கள் நடைபெற்ற போது தலைமையகம் பலாலிப்படைத் தரப்புடன் கதைப்பார்கள். படையினர் மன்னிப்பு கோருவர்.

தமிழர்களின் சார்பில் பெருமனதுடன் ICRC இனர் அவர்களை மன்னிப்பார்கள்.

இந்த நிர்வாக சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பெரும்பாலும் எறிகணைகளையே சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பாதுகாப்பு வளையத்துக்குள் படையினர் ஏவத்தொடங்கினர். 



வடகிழக்கிலோ அல்லது வடகிழக்குக்கு வெளியே படையினருக்கு ஏற்படும் இழப்புகள் அனைத்தையும் சிலமணி நேரங்களில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகள் மீது எறிகணை வீசி தீர்த்துவிடுவார்கள் படையினர்.



அன்றும் அப்படிதான் ஓர் நாள் பலாலியில் இருந்து ஏவப்படட எறிகணை யாழ் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக்கூட சுவர்கள் மூன்றைத் துளைத்து சத்திரசிகிச்சைக்கூடத்துக்கு உள்ளே வீழ்ந்தது. ஆனால் எறிகணை தெய்வாதீனமாக வெடிக்கவில்லை. 



ஆம், பலத்த இடர்கள் கடந்து எம்மண்ணில் கடமையிலிருந்த அனைத்து ICRC உறுப்பினர்களுக்கும் இன்றைய நாளில் இதயப்பூர்வமான நன்றி!