மணலில் பாதம் பதித்து “நர்த்தனம்” ஆடுவது “நண்டு”!🦀
மலரில் பாதம் பதித்து “கீர்த்தனம்”இசைப்பது”வண்டு”!🐞
அகத்தே ஆடல்,பாடல் எனும் கலை உணர்வாலும்,
புறத்தே புறவன்கூடு (Exoskeleton)
எனும் கனதியான கவசத்தாலும் இரண்டுமே ஒத்த இயல்பு கொண்டவை!
பாரினில் பல காலம் புண்பட்டு புண்பட்டே பண்பட்ட பழந்தமிழன்
தன்னை சுற்றி உலவிய உயிரினங்களையும் ஊடுருவிப் பார்த்தே உள்ளான்.
ஆதலினால்தான் நீர்வாழ் உயிரினத்தையும் தரைவாழ் உயிரினத்தையும் செம்மொழி “நண்டு” எனவும் “வண்டு” எனவும்
இணைத்தே உள்ளது!
பாருள மொழிகளை எல்லாம் கடன்வாங்கியும், களவெடுத்தும், சுரண்டியும் ஊதிப்பெருத்த மொழியல்லவே எம் செவ்வியல் மொழி!
துப்புக்கொட்ட ஆங்கிலம் Crab 🦀 என்றும் Beetle 🐞 என்றும் சொல்வது போல எங்கள் செம்மொழி வேற்றுமை காணவில்லை!!😇