வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த சித்திரை பௌர்ணமி திருவிழா நாளை வெள்ளிக்கிழமை 19/04/2019 நடைபெற உள்ளது.
இத்திருவிழாவில் வட மாகாண ஆளுநரும் யாழ்மாவட்டக் கட்டளைத்தளபதியும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
எங்கள் உள்ளக் கிடக்கைகளை அவர்களிடன் எடுத்துக் கூறி எங்கள் காணிகளை விடுவிக்கக் கோருவதன் மூலம் காணி விடுவிப்பை துரிதமாக்க அழுத்தம் கொடுக்க எமக்குக் கிடைத்த நல்வாய்பு இது.
எனவே இவ்வாய்ப்பினை தவற விடாமல் பயன்படுத்தவும், மானம்பிராயானின் அருளாசியைப் பெறவும் அனைத்து வயவையூர் மக்களையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
மேலும் நாளை ஆலயத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்படும். மேலும் வயவைக் காணிகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
இவ் வரலாற்றுக் கடமையில் அனைத்து வயவை மக்களும் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.
பல்லாண்டு காலம் சொந்த மண்ணை விட்டு வேறு மாவட்டங்களில் வசிக்கும் வயவை மக்கள் இச்சிறப்பு நாளிக் கலந்து கொள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
காலை 6 மணிக்கு தேவிபுரம் பாடசாலையில் இருந்து பேருந்து புறப்பட்டு, பரந்தன் ஊடாக வயாவிளானை சென்றடையும். ஆகவே கிளிநநொச்சி வாழ் எம் உறவுகள் பரந்தன் சந்தியில் காலை 6மணிக்கு ஒன்றுகூடவும்..
காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. அனைவரும் தங்களது அடையாள அட்டைகளை தம்முடன் எடுத்துவரவும். மற்றும் வயாவிளான் கிராம அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்கள் ஏற்பாட்டாளர்கள்.