மாயக்குதிரை – 01

306

வங்காள தேசத்தில் ஒரு குடியானவன் வாழ்ந்து வந்தான்.

அவனுக்கு வீரன், வினயன் விஜயன் என்று மூன்று மகன்கள் இருந்தாங்க.

வீரனும் விஜயனும் கடுமையான உழைப்பாளிகள். ஆனால் விஜயன் கொஞ்சம் புத்திசாலி..

குடியானவன் தன்னுடைய நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தான். கதி முத்தியாச்சி, இன்னும் இரண்டு நாளில் அறுவடை பண்ணிடலாம். 

வீரன் காவலுக்கு வயலில் இருந்த பரண் மேல தங்கிகிட்டு இருந்தான்.

அன்னிக்கு விடியற்காலை மூணு மணி வரைக்கும் காவல் காத்துகிட்டு இருந்த வீரன், கொஞ்சம் கண்ணசந்துட்டான். அஞ்சு மணிக்கு கண்ணை முழிச்சுப் பார்த்தா எதிர்ல இருந்த வயல்ல ஒரு பயிரும் காணோம்..

வீரன் அழுதுகிட்டே ஓடி வந்து அப்பா கிட்ட சொல்ல எல்லோருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது..

இருந்தாலும் மனசைத் தேத்திகிட்டு அடுத்த முறை நெல்விதைச்சு மறுபடி விவசாயத்தை ஆரம்பிச்சாங்க.

இந்த முறை வீரனும் வினயனும் காவலுக்கு இருந்தாங்க…

அதே மாதிரிதான்… ஒரே ஒரு நாள் இவங்க இரண்டு பேரும் விடியற்காலை கண்ணசந்தப்போ வயல்ல இருந்த மொத்தப் பயிர்களும் காணாமப் போயிருச்சி..

குடியானவனால் தாங்க முடியலை. விஜயன் அப்பாவைத் தேத்தி இந்த முறை விதைப்போம் அப்பா. இந்த முறை நான் காவல் காக்கறேன் இதிலியும் ஒன்றும் முடியாட்டி நிலத்தை வித்துட்டு வேற நிலம் வாங்கலாம்னு தேற்றினான் விஜயன்.

மூணாவது முறையா நெல் வெள்ளாமை செஞ்சாங்க. விஜயன் பரண் மேல தங்காம ஒரு கட்டிலை தயார் செய்தான்.. பயிர் அளவு உயரமே இருந்த அந்தக் கட்டிலில் நெல்கதிர்கள் போட்டு மூடி அதன் மேல இருந்து கவனிக்க ஆரம்பிச்சான்..

அன்னிக்கு பௌர்ணமி.. முழு நிலா வானத்தில தகதகன்னு வெள்ளையா அழகா இருந்துச்சி.. விஜயனுக்கு தூக்கம் கண்ணைச் சொக்கினாலும் கட்டுப்படுத்திகிட்டு காத்திருந்தான்..

விடியற்காலை 4 மணிக்கு தெற்கு திசையில இருந்து எதுவே வர்ர மாதிரி தெரியவே விஜயன் உஷாரானன்.

கிட்ட வர வர தெரிஞ்சது அது ஒரு குதிரை…

வெள்ளி வண்ண உடலும் தங்கப் வாலும், பிடரியும், குளம்புகளும் கொண்டு முத்துப் பற்கள், ரத்தினக் கண்கள் இப்படி பார்க்கவே வித்தியாசமா இருந்த அந்தக் குதிரை வயல்ல இறங்கி மேய ஆரம்பிச்சது…

விஜயன் அமைதியா படுத்துகிட்டு இருந்தான். குதிரை அவன் பக்கம் வந்ததும் டக்குன்னு அதன் பிடரியைப் பிடித்து டகால்னு ஆதன் மேல ஏறி உட்கார்ந்தான்,,

குதிரை திடுக்கிட்டுப் போச்சு… உடம்பை உதறியது என்னென்னமோ செஞ்சு பாத்துச்சு.. விஜயன் பிடியை விடவே இல்லை.

குதிரை அப்படியே வானத்தில் கிளம்பி பறக்க ஆரம்பிச்சது..

தொடரும்.