வானத்தை அளந்து பார்க்கலாம் – 03

432

சூரியனுக்கு அப்புறம் சந்திரன் என நினைத்தீர்கள்தானே.. சரிதான். ஆனால் மூணாவதா பூமியைப் பார்ப்போம்.

சந்திரனை பெண்ணாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். 

சந்திரன் பூமியிலிருந்து 384,4903 கி.மீ தூரத்தில் உள்ளது. சந்திரன் பூமியை 27.3 நாட்களுக்கு ஒரு முறை வலம் வருகிறது. (ஹா ஹா.. புத்திசாலிங்க நீங்க,, நம்ம ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் எப்படி வந்தது என்று சரியா யூகிச்சிட்டீங்களே…)

ஆனால் அமாவாசைக்கு அமாவாசை இருக்கும் வித்தியாசம் 29.5 நாட்கள். இதற்குக் காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுது.. பூமி சூரியனைச் சுற்றுது. இதனால் இதனால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள கோணமாறுபாடுகளால் நமக்கு சந்திரனின் உருமாற்றம் 29.5 நாட்கள் கொண்டதாக இருக்கிறது.

இதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதை வச்சுதான் அந்தக் காலத்துல வானத்தைப் பார்த்து மாதம் நாள் மணி சொல்லுவாங்க.. இதைப் பின்னால் பார்க்கலாம்.

சந்திரனோட குறுக்களவு 3424 கிலோமீட்டர்கள். 

எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அதைப் பார்க்க நினைக்காதே. பார்த்தா பயந்திடுவ என்று சூப்பர் ஸ்டார் படையப்பாவில் சொன்ன மாதிரி நிலவிற்கு இரண்டு முகங்கள் என்ச் சொல்லலாம்.

பூமிக்குத் தெரியும் முகம் இது..

பூமிக்குத் தெரியாத முகம் இது

[media]http://upload.wikimedia.org/wikipedia/commons/2/2a//Moon_PIA00304.jpg[/media]

இதற்குக் காரணம் நிலா தன்னைத் தானே சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலமும் பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலமும் ஒரே அளவு.

ஒவ்வொரு அமாவாசைக்கும் சூரிய கிரகணம், ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சந்திர கிரகணம் வரலியே என்ன காரணம்?

இதுதான்… சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள அச்சிற்கும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அச்சிற்கும் உள்ள வித்தியாசம்.

பூமியைப் பார்க்கும் நிலா முகம் மனிதனின் கண்ணடி பட்டதாலோ என்னவே நிறைய அடி வாங்கி இருக்கிறது… நிலாவின் பின்பகுதியோ அவ்வளவாக அடிவாங்கவில்லை. ஏன் என்று யோசிக்க வேண்டிய விஷயம்தானே…

நிலவில் உள்ள தட்ப வெப்ப நிலை காரணமாக வால்நட்சத்திரங்கள் மோதுவதல் கிடைக்கும் நீர் ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரிந்து நிலவின் ஈர்ப்பு விசைக் குறைபாட்டினால் நிலவில் தங்காமல் போயிருக்கலாம். ஆனால் தெ துருவப் பகுதியில் உள்ள சில பள்ளங்களில் சூரிய ஒளி எப்பொழுதுமே விழாத காரணத்தினால் அங்கு நீர் உறைந்திருக்கலாம் எனக் கருதப் படுகிறது. நாசாவும் அதை ஆய்வு செய்யப் போகிறது.

4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மிகப் பெரிய மோதலினால் பூமியிலிருந்து நிலா பிய்க்கப் பட்டதாக கருத்து நிலவுகிறது. நிலவின் மிகச் சிறிய உட்கருவும் மிக அதிகமான மேண்டில் பகுதியும் இதை உறுதி செய்வது போல இருக்கிறது. 

http://en.wikipedia.org/wiki/File:Moon_Schematic_Cross_Section.svg

நிலவில் வளிமண்டலம் மிகச் சிறிய அளவே உண்டு, இல்லை என்பது கப்ஸா.

கதிரியக்கத்தினால் உண்டாகும் ரேடான், மிகச்சிறிய விண்கற்கள், சூரியத் தழல், சூரிய ஒளி இவற்றால் உண்டாகும் பொட்டாசியம் சோடியம் போன்ற வாயுக்கள், ஆர்கான், ஹீலியம், ஆக்சிஜன் மீத்தேன், நைட்ரஜன், கார்பன் மோனாக்ஸைடு / டை ஆக்ஸைடு போன்றவையும் மிகக் குறைந்த அளவே உண்டு,

பூமியில் கிடைக்காத சில தனிமங்களும் நிலவில் இருக்கலாம்.

நிலவினால் உண்டாகும் சில பல விஷூவல் எஃபெக்ட்கள்..

1. கடல் ஓதங்கள்..

2. கிரகணங்கள்

3. பூமியின் தள்ளாட்டம்.. மற்றும் சுழற்சி வேகக் குறைவு..

பூமியைத் தவிர மனிதனின் காலடி பட்ட இன்னொரு இடமாக நிலா உள்ளது..

இன்னும் வரும்…