வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க – குரு

செவ்வாய்க்கு அடுத்து குருவைப் பார்ப்பதுதான் சரி…

குரு என்னும் வியாழக்கிரகத்தை பற்றி வானியலார்கள் ரொம்ப காலத்துக்கு முன்பே பல சரியான கணிப்புகளை வச்சிருந்தாங்க…

1. குரு மிகப் பெரியதுன்னு தெரிஞ்ச கிரேக்கர்கள் அதை தேவர்களின் தலைவன் ஜூயூஸ் என்ற பேரை வைத்து ஜூபிடர் என அழைத்தார்கள்.

2. நம்ம ஊர்ல கூட குருவிற்கு தனி மரியாதைதான், குரு பளிச்சுன்னு வானத்தில் தெரியும்.

சைஸை வச்சுப் பார்த்தா வியாழன் சூரியனில் ஆயிரத்தில் ஒரு பங்குன்னு சொல்லலாம். (அதை விடக் கொஞ்சம் சின்னது)

குருவை இப்படிப் பாருங்க தலை சுத்தும்..

குருவுக்கு 63 நிலா இருக்காம்.. இன்னொரு சிறப்பு என்னான்னா, குருவுக்கு சில சமயம் டெம்பரரரி நிலா கூட உண்டு… அதாவது ஒரு இரண்டு வருஷம் குருவைச் சுத்திட்டு ஓடிப்போயிடும்..

நிலாக்களைப் பற்றி அப்புறம் பார்ப்போம்..

முதல்ல நம்ம சூரியக் குடும்பத்தில் குருவோட மகிமையைப் பார்ப்போம்.

குருவோட விட்டம் 142,984 கிலோ மீட்டர், அதாவது பூமியை விட 12 மடங்கு பெரிசு. சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள், சந்திரன்கள் இன்னும் எல்லா தூசு தும்புன்னு எடுத்து ஒரு பக்கம் போட்டாலும் அதை விட இரண்டு மடங்குக்கும் அதிகமா எடை உள்ளது குரு.

நாம எல்லாம் எல்லா கிரகங்களும் சூரியனைச் சுத்துதுன்னு தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கோம்.. இல்லை என்பதை இந்த குரு நிரூபிக்குது….

இரண்டு பொருட்கள் இருக்குன்னு வச்சுக்குவோம். இவற்றின் ஒன்றுக்கொன்றான ஈர்ப்பு விசையில் சுழலுது என்றால் அவற்றின் பாதை கீழ் கண்டவாறுதான் இருக்கும்.

அதாவது இரு பொருளின் மையப்புள்ளிக்கும் இடைப்பட்ட ஒரு மையப்புள்ளியைச் சுற்றி இரண்டுமே சுற்றி வரும்.

இந்த மையப் புள்ளி எப்படி நிர்ணயமாகிறது என்பதில்தான் விஷயமே இருக்கு..

இது இரண்டுக்கும் உள்ள பருமனைப் பொறுத்தது. இரண்டும் சம அளவான பருமன் இருந்தால் இந்தப் புள்ளி இரண்டுக்கும் மையத்தில் இருக்கும்.

சூரியனின் பருமன் மிகப் பெரிது. மற்ற கோள்களைப் பொறுத்தவரை இந்த மையப்புள்ளி சூரியனுக்கு உள்ளேயே அடங்கி விடுகிறது.. அதனால் சூரியன் சிறிதளவு தள்ளாடுவது போலத் தெரியும்.

ஆனால் குருவுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மையப் புள்ளி சூரியனுக்கு வெளியே இருக்கிறது. சூரியனின் ஆரம் 1 என்றால் 1.068 அதாவது சூரியனின் மேற்பரப்புக்கு மேல் இந்தப் புள்ளி இருப்பதால் இந்தப் புள்ளியை சூரியன் சுற்றுகிறது.

இப்போ பூமி சூரியனைச் சுற்றி வருது. க்ருவும் சூரியனைச் சுற்றுது.. இதனால தெரிஞ்சோ தெரியாமலோ குரு பூமியையும் சுற்றி வருது…

அதாவது நாம பிரகாரத்தைச் சுத்தி வரும்போது பூசாரி முதற்கொண்டு சிலரையும் சேர்த்துச் சுத்தி வர்ரோமில்லையா அந்த மாதிரி…

மற்ற நட்சத்திரங்களில் கிரகங்கள் இருப்பதையும், சூரியக் குடும்பத்தின் நெப்டியூன், புளூட்டோ போன்ற கிரகங்களையும் இம்மாதிரி சூரியத் தள்ளாட்டக் கணக்கீட்டில் தான் இருக்குமென்று ஊகித்து பின்னர் அது சரி என்றும் கண்டறிந்தார்கள்.

அதாவது சூரியன் உட்பட சூரிய குடும்பத்து கோள்கள், குறுங்கோள்கள் அனைத்தும் ஈர்ப்புச் சமநிலை உள்ள ஒரு புள்ளியைச் சுற்றி வருகின்றன.

இதனால்தான்

இந்தக் கோட்பாட்டை விரித்துப் பார்க்கும் போது என்னதான் இந்தப் பேரண்டத்தில் எல்லாமே சுற்றிச் சுழன்றாலும் அனைத்திற்கும் மத்தியில் ஒரு புள்ளியில் ஈர்ப்ப்ச் சமத்துவம் இருக்கும் எனப் புரிகிறது. அதுவே பேரண்டத்தின் மையம்.

நியூட்டனின் லா ஆஃப் மோஷன், கெப்ளரின் விதிகளைப் படித்தால் இது மிகத் தெளிவாக விளங்கும்.

குரு சூரியனைச் சுற்றி வர 11.86 வருடங்கள் ஆகின்றன, பூமி சூரியனைச் சுற்றும் போது ஒவ்வொரு 398 நாட்களுக்கு ஒரு முறை சுரியனுக்கும் குருவுக்கும் இடையில் வரும்.

குருவும் சுற்றி வருகிறது, பூமியும் சுற்றி வருகிறது. இதனல் வானத்தில் குரு நமது கண்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருவது போலத் தெரிகிறது.

12 என்றதும் உங்களுக்கு டக்குன்னு ஞாபகம் வருவது என்ன?

12 ராசிகள்..

சூரியன் 12 மாதத்தில் ராசிமண்டல்த்தில் சஞ்சாரம் செய்யுது, குரு 12 வருடத்தில் இராசி மண்டலத்தில் சஞ்சாரம் பண்ணுது… அப்போ ஏறத்தாழ சூரியன் அப்பான்னா, குருவை பெரியண்ணான்னு சொல்லலாம் தானே.

குருவுக்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கு