தமிழை தமிழாகக் கற்போம்..

738

பெப்ரவரி 21.. உலகத் தாய் மொழிகள் நாள். தாயைப் பழித்தால் அவள் தடுத்தால் விடுவிவேன்; தமிழைப் பழித்தால் எவர் தடுத்தாலும் விடேன் என்றான் புரட்சிக் கவி வேந்தன் பாரதி தாசன். அவ்வாறானதொரு அறச்சீற்றத்தின் நெடும்பயணத்தின் குறுந்தொகுப்பே இப்பக்கம்.

தமிழெங்கள் தாய்மொழி. இத்தாய்மொழியில் நாம் பேசுகின்ற சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்களா? இல்லவே இல்லை.. வேற்று மொழிச் சொற்கள் தமிழிலிருந்து பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டறக் கலந்து விட்டன.

ஐரோப்பியரின் காலணித்துவம் தமிழ் மண்ணில் வேரூன்றியதால் சில ஐரோப்பியச் சொற்களும், ஆரியர்கள் இந்தியாவில் ஊடுறுவிதால் அவர்களின் தாய்மொழியான சமஸ்கிரதமும் தமிழுக்குள் ஐக்கியமாகின. ஆனாலும் வடமொழியான சமஸ்கிரதமே தமிழில் அதிகம் கலந்துள்ளது.

தமிழியலாளர்கள் அனைவரையும் இம்மொழிக் கலப்பானது சங்கடப்படுத்தினாலும், மாற்றுச் சிந்தனைக்கு அவர்களை இட்டுச் செல்லவில்லை ஆதலால், தமிழில் எழுந்த பெருங்காப்பியங்களில் எல்லாம் வடமொழியான சமஸ்கிரதம் உட்காந்துகொண்டது.

இந்நிலமைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனித்தமிழுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் மறைமலை அடிகளார் ஆவார். இவரைத் தொடர்ந்து மொழி ஞாயிறு என்று அழைக்கப்படும் தேவநேயப் பாவாணர் முன்னெடுத்துச் சென்றார். இவர்களைப்பற்றி பிறிதொரு இடத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

இவர்கள் வித்திட்ட தனித்தமிழ் ஆர்வம் இன்று தமிழரிடையே துளிர் விடத் தொடங்கியுள்ளாதைக் காணலாம். இது முழுமை பெற வேண்டுமாயின் முதலில் தமிழிலுள்ள வேற்று மொழிச்சொற்களை கண்டறிதல் பயனுடையதாகும். இதன் முனைப்பே இந்தப்பக்கமாகும்.

1 COMMENT