காதல்

407

காதல். இந்தச் சொல்லைக் கேட்டால் இதயத்தில் தேனை ஊற்றியது போல் இனித்த தருணம் இல்லாத மனிதர் எவருமில்லை. இறைவன் தொடக்கம்இ தை உணராமல் எந்த மனிதரும் கடந்து செல்ல முடியாது. காற்றில்லாமல் வாழ முடியாதது போல்தான். உலகையே விலைக்கு வாங்கியதுபோல் நினைப்பு வரும். சொர்க்கத்தைக் கண்டதுபோல் துடிப்போம். நொடிக்கு,நொடி பல கற்பனைகள் ஊற்றெடுத்து இதயத்தை குளிப்பாட்டும். பல ரசனைகள் வரும். கற்பனை உலகில் பறப்போம். இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். விபரிக்க வார்த்தைகள் போதாது.கற்பனையிலோ அல்லது அனுபவித்துத் தான் உணர்ந்துகொள்ள முடியும். மனிதப் பரிமாணத்தில் இதுவும் ஒரு கட்டம்.

அப்ப ஏன் காதலால் பல நன்மை, தீமைகள்?

காதலுக்கும் கவர்ச்சிக்கும் மிகச் சிறு வித்தியாசம் தான். அதுகும் விடலைப் பருவத்தில் வரும் காதல் மிகவும் ஆபத்தில் முடியக்கூடியது. கத்தி மேல் நடப்பது போல். விடலைப் பருவம் மிகவும் பொல்லாதது மட்டுமின்றி,வாழ்க்கையின் முக்கிய பகுதியும் கூட. நாங்கள் எப்படி இருக்கப்போறம் என்பதைத் தீர்மானிக்கும் வயது. இங்கேதான் இறைவனும் அறிவும் போராடுன்றன.

காதலினால் தீமைகள் கூட என்றோ இல்லை நன்மைகள் கூட என்றோ எழுதாமல் இரண்டையும் சமமாக எழுதுகிறேன். காதல் பல வடிவங்கள், கட்டங்கள், பருவங்கள், காலங்களில் தோன்றுகிறது. ஒருவருடைய அழகு, நடத்தை, செயல், குணம், பண்பு, சுபாவம் இப்படி என்னும் எத்தனையோ எத்தனையோ காரணங்கள்.

ஏன் அவளை அல்லது அவனை விரும்பினாய் எனக் கேட்டால் பல விசித்திரமான காரணங்கள் சொல்லப்படுவதும் உண்டு. அவர் அல்லது அவர் நடை பிடித்திருக்கு; அழகு பிடித்திருக்கு; ஸ்டைல் பிடித்திருக்கு; கதை பிடித்திருக்கு; தலை முடி பிடித்திருக்கு இப்படி சொல்லிக்கொண்டே போவார்கள். சிலர் எல்லோரும் காதலிக்கிறார்கள் நானும் காதலிக்கிறேன் என்பார்கள். பொழுது போக்குக்காக காதலிக்கிறேன் என்பார்கள். கற்பனை செய்து பார்க்க முடியாத பல விசித்திரமான காரணங்கள் சொல்லப்படும்.

தனது வாழ்க்கைக்குச் சிறந்த ஒருவனையே அல்லது ஒருத்தியையோ யார் அடைகிறார்களோ அவர்கள் வெல்கிறார்கள். காதலின் சின்னமாக தாச்மகால் பார்க்கப்படுகிறது.

பல குடும்பங்கள் காதலால் இணைந்திருக்கு. பல நாடுகள், பல மனிதர்கள், பல இனங்கள், சாதிகள், மதங்கள், மொழிகள், இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.

அதேபோல் எவ்வளவு அழிவுகள்; போராட்டங்கள்; போர்கள்; துக்கங்கள்; பிளவுகள்; சோகங்கள்; அவமானங்கள்; பகை; எத்தனை தற்கொலைகள்; இன, மத, மொழி, சாதி, மோதல்கள் இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். காற்று தென்றலாயும்; சூறாவளியாகவும் வீசுவது போல்தான் காதலும்.

இன்றைய அசுர விஞ்ஞான வளர்ச்சியில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்து மனிதனை ஆட்டுவிக்கிறது. நல்ல வாழ்க்கையை அமைத்து அன்பாய், பாசமாய், ஒற்றுமையாய் இருந்து வாழ்வோமாக. நல்லவைகள் நடக்கும் என்ற ஆசையுடன் முடிக்கிறேன்.

அன்புடன் 
வ.பொ.சு–மாரிட்டி மண்ணின் மைந்தன்