தென்னாடு என்பது தமிழகம் மட்டுமன்றி ஆந்திர, கேரளா, கர்நாடகம், என்று கொண்டதே இந்த தென்னாடு !!இந்த தென்னாட்டுக்கு உடையவன் என்ற சொல், தென்னாடு மட்டுமே உடையவன் என்று பொருள் கொள்வது தவறே !! அதை கொஞ்சம் பின்னே பார்ப்போம்,இப்போது உடையவன் என்று கூற காரணம் உணர்வோம்,
வரலாற்று சான்று என்று புராணங்கள் கொண்டு பார்த்தால்
1. மதுரை என்ற பாண்டிய நாட்டில், இறைவனே அந்த நாட்டுக்கு உடையவனாக முடிசூடிக்கொண்டு இன்றுவரை ஓர் மண்ணாகவே எல்ல விழாக்களிலும் எழுந்து அருள்கிறார் !! இறைவனே உடையவனாக ஏற்றுக்கொண்ட நாடு என்பதால் !!
2. அண்ணாமலை, ஊழி காலம் என்ற காலத்தில் இந்த ஜெகமே அழியும்போது எல்ல உயிரும் ஒடுங்கும் இடம் அண்ணாமலை, இந்த உலகம் உருவாக உயிர்கள் பிறந்த இடம், மீண்டும் அங்கேயே ஒடுங்கும் அதுவும் தென்னாடு !!
இவையெல்லாம் வரலாறு / சரித்திரம் கொஞ்சம் அறிவியல் வழியும் பார்ப்போம் !!இன்றைய நவீன அறிவியல் உபகரணங்கள் கொண்டு ஆராய்ச்சி செய்து !! இந்த உலகின் மையம் ( CENTER OF EQUVATOR ) என்று கண்டு பிடித்த இடம் சிதம்பரத்தில் ஆடும் கூத்தபிரான் ஊன்றிய காலின் மையப்புள்ளி !அதேபோல ஒவ்வொரு நவகிரக தளமும் அந்த அந்த நவகிரக மையத்தோடு தொடர்புடைய தளங்களில் சிவாலயங்கள் எழுப்பட்டு, அந்த மையத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது என்று அறிவியலே கூறுகிறது !!
அப்போது பிரபஞ்சத்தின் பேராற்றல் இந்த பூமியை இயக்கிகொண்டு இருக்கும் மையமே சிதம்பரம் என்ற தென்னாடு !!அதாவது இந்த பூமி என்ற உலகம் இந்த பிரபஞ்சம் ஆகிய பேரண்டத்தொடு பிணைக்க பட்டுள்ள உலகின் மையம், ( நமது உடலில் உயிர் போன்ற மையம் ) தென்னாட்டில் உள்ளது !!அந்த தென்னாட்டில் வழியாக, மையத்தின் வழியாக இந்த பூமியை இயக்கும்படி இயக்குகிறது சிவம் !!ஆதலால் அண்டத்தை அறிந்து உணர்ந்து, நாமும் உணரும் படி அண்டபகுதியும் அருளிய மாணிக்கவாசக பெருமான் !!
இந்த பூமியில் மையத்தை உடையவனாகிய சிவம் என்ற பேராற்றலை, தென்னாடு உடையவன் என்ற மெய்யை சொல்லி அவன் வழியே தான் நீங்கள் பிர்த்து பார்க்கும் நாடுகள் எல்லாம் இயங்குகிறது என்ற மெய்யை ஏற்கும் படி அருளியுள்ளார் !!நம்மை தென்னாட்டில் பிறக்கவைத்த பெருங்கருணையை போற்றுவோம் !!
தென்னாடுடைய சிவனே போற்றி !!
என்நாடவர்க்கும் இறைவா போற்றி !!
திருச்சிற்றம்பலம்