இலக்கியமா இலக்கணமா – சினிமா

450

ஏனில்லை திரைப்பட பாடல்களிலும் உண்டு…

சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
(சஹாரா)

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா

வெறும் சாரலில்லை–சஹானா என்ற புல்வெளிச் சாரல் தூவுதோ

சஹாரா பூக்கள் பூத்ததோ காதல் பூ பூக்கும் முன் பாலைவனமா?

இரு துருவத்தையும் காதலில் மட்டும் தான் பார்க்க முடியும் போலும்.

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு

தலைவியின் மெல்லியதான தாபம் அழகான வார்த்தைகளில் வெளிபடுகிறது.

மீசையை விதவிதமாக கையாளப்பட்டு பார்த்திருக்கின்றோம்.
சாவியாக உருவகப்படுத்திருக்கின்றார்….கவிஞர்…

அதற்கு பதிலாக

தலைவனின் மனம் இவ்வாறு விரிகின்றது….எவ்வளவு தூரம்…

பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா…

இதையே தலைவியின் தாபத்திற்கு தலைவனின் பதிலாகவும் எடுத்து கொள்ளலாம்..

பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே—தலைவியும் பூவே…பூக்களுடன் பூ தலைவி…..

சங்க இலக்கிய அகப்பாடல்கள் இத்தகையதே…..

சரி.நான் எழுதியவற்றிலிருந்து ஒன்றை புரிந்து கொண்டிருப்பீர்கள்…..என நம்புகிறேன்.

சொற்களின் அணிவகுப்பு கவிதையாகா.அதற்கு மேலும் சொல்லுக்கு,கவிக்கு அணி(அழகு) சேர்க்க வேறு ஏதோ ஒன்று தேவை

– ஜெயபுஷ்பலதா – தமிழ்மன்றம்