நூடில்ஸ் தின்ற மயில்

“மயில் நல்லாய் நூடில்ஷ் தின்னும் “
என்றான் அந்தத் தம்பி!

நல்ல வசதியான வீட்டுப்பிள்ளை,காவியங்களிலும் கர்ண பரம்பரை கதைகளிலும் நீங்காத இடம்பிடித்த கானமயிலுக்கு தீனியாக(Fodder) நூடில்ஷ் எல்லாம் போட்டு இந்தக் கட்டிளம்காளை வளர்த்து இருக்கிறான் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

பேச்சைத் தொடர்ந்த போது மேலும் தொடர்ந்தான்.

“வவுனியா செட்டிக்குளத்தில் நலன்புரி நிலையம்/Welfare Camp” என்ற பெயரில் தமிழர்களின் கனவுகளுடன் அடிப்படைத் தேவைகளும் பறித்தெடுக்கப்பட்டு வாழ
நிர்ப்பந்திக்கப்பட்டிருத்திந்த காலத்தில் அங்கு வாடினேன்.

ஆரம்பத்தில் சமைத்த உணவாக ‘நூடில்ஷ்’ தருவார்கள். கொடும் பசியால் இரண்டு வாய் வைத்தாலும் சாப்பிடமுடியாது.

முதலில் காட்டு வித்தனில் மேய்ந்த ஓரிரண்டு மயில்களுக்கு அதைப் போட்ட போது நன்றாக உண்டு மகிழ்ந்தது.

பின் வந்த நாட்களில் உறவுகளுடன் படையெடுத்து வந்து உண்டு மகிழ்ந்து சென்றது.

“புழுக்கள், சிறிய வகைப் பாம்புகள் என்ற புளுகத்தில் அவை நூடில்ஷை மேய்கின்றன”என ஒருவர் சொன்னார்.

அவர் ஏட்டறிவும் பட்டறிவும் மிகு பெட்டகமாக முகாமில் வசித்த மூதாளர்.

அன்றிலிருந்து தனக்கு மயில் மீதான நாட்டமும் போய்விட்டது” என்றான்.

ஆம், அழகியலும் துன்பியலும் கலந்த சில விடையங்கள் எங்கள் ஆன்மாவில் நிலைத்துவிட்டது.

2 COMMENTS

  1. முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான முட்கம்பி முகாம்கள் தொடர்பான அவலங்களை தனது “கருணை நதி”நாவைலில் மித்தாயா கானவி எனும் ஈழத்து எழுத்தாளர் பதிவு செய்து உள்ளார்.

    நன்றி வயவன்

  2. முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான முட்கம்பி முகாம்கள் தொடர்பான அவலங்களை தனது “கருணை நதி”நாவைலில் மிதயா கானவி எனும் ஈழத்து எழுத்தாளர் பதிவு செய்து உள்ளார்.

    நன்றி வயவன்

Comments are closed.