දේදුන්න පුවත්පත් – தமிழர் நிழல் அரசின் சிங்களப்பத்திரிகை.

அரசியல் விழிப்புணர்வு ஏதுமின்றி ஆழ்துயில் கொள்ளும் சிங்களப் பாமரமக்களுக்கு சிறுபான்மை இனங்களின் இன்னல்களைச் சொல்லவதே வானவில் எனும் சிங்கள பத்திரிகையின் தலையாய நோக்கமாக இருந்தது.

ஆழ்துயில் கொள்ளும் சிங்களப் பாமர மக்களுக்கு சிறுபான்மை இனங்களின் இன்னல்களைச் சொல்லவதே அப்பத்திரிகையின் தலையாய நோக்கமாக இருந்தது.

வண்ணங்களின் வங்கியாக
வானிலோர் வளைவு வானவில்!

எண்ணங்களுக்கு ஏணி சமைக்கும்
வளைவு வானவில்!

இங்கிலாந்தில் இவ் வளைவில் ஏறிய எனை முதல் முறை வானவில் தேசமாகிய தென்னாபிரிக்க்காவில் இறக்கிவிட்டது.

அது வானவில்தேசம் ஆகும்.

கறுப்பர்,வெள்ளையர் என்பதற்கு அப்பால் பல்லினத்தவர் வாழும் தேசம் என்பதை தென்னாபிரிக்க்காவில் வாழும் அனைத்துச் சமூகங்களும் பெருமனத்துடன் ஒப்புக்கொண்டு வாழ்வதால் அது வானவில்தேசமான(Rainbow Nation)காதை சொன்னது.

இரண்டாவதாக தமிழர்தேசத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் இறக்கிவிட்டது.

அது வானவில் பத்திரிகை வெளிவந்த தேசம் ஆகும்.

ஆம், அன்று கிளிநொச்சியில் ஒரு பத்திரிகையின் பெயர் දේදුන්න ஆகும்.

දේදුන්න/தேதுன்ன அதாவது வானவில்
என்ற அழகிய பெயரில் ஓர் சிங்களப் பத்திரிகை கிளிநொச்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது.

அலைக்கரங்களால் தாலாட்டப்படும் அழகிய மாங்கனித்தீவில் அறிதுயில் கொள்ளும் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கும், மல்வத்த பீடத்தினருக்கும் தமிழர் அவலநிலை சொல்ல முனைந்தது,

என்பதைவிட…

ஆழ்துயில் கொள்ளும் சிங்களப் பாமர மக்களுக்கு சிறுபான்மை இனங்களின் இன்னல்களைச் சொல்லவதே அப்பத்திரிகையின் தலையாய நோக்கமாக இருந்தது.

அழகிய எங்கள் மாங்கனித் தீவும் பல்லினத்தவருக்கும் சொந்தமான வானவில் தேசமே!🌈