“ஓடுகாலியாய் உணரும்
************ ********
ஒளிநட்சத்திரம்”
***************
எனைக் காவலுக்குவிட்டு விட்டு
தோழர்கள் தூங்கிவிட்டார்கள்!
அடர்ந்த அந்த அடவி(காடு)யில் சுற்றுமுற்றும் பார்க்க முடியாமல் இருள் கவிந்திருந்தது
அருவி ஓடும் சத்தம் மட்டும் தூரத்தே கேட்டுக் கொண்டேயிருந்தது!
அண்ணார்ந்து பார்த்தேன்,
நட்சத்திரங்களைக் காவலுக்குவிட்டு விட்டு நிலவு நிம்மதியாய் மேகத்துக்குகள் தூங்கிக் கொண்டிருந்தது!
அந்த ஒரு மணி நேரக்காவல் கடமையில் என்னையும் ஒரு “ஒளிநட்சத்திரமாய்” உணர்ந்தேன் அன்று!
இன்றும் எனைத் தனியே விட்டு விட்டு தோழர்கள் துயிலும் இல்லத்தில் துயில்கிறார்கள்.
ஆனால்,
என்னை ஒரு “ஓடுகாலி”யாய் உணர்கிறேன் இன்று!