வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க – குரு

குரு சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம். குருவோட அளவு பூமியை போல 1321 மடங்கு என்றாலும் எடை 318 மடங்குதான். முன்னரே பார்த்தோம் இல்லையா? பூமிதான் ரொம்ப இறுகிய கிரகம் என்று..

குருவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட 2.5 மடங்கு அதிகம். குரு வருஷா வருஷம் 2 செ.மீ அளவு சுருங்கி வருகிறது. பயப்படாதீங்க இதன் காரணம் இதில் அதிக அளவு விண்கற்கள் விழ ஆரம்பித்து இதனால் இதன் ஈர்ப்பு விசை அதிகரிப்பதே காரணமாகும்..

குரு ஒரு போலீஸ்காரர் மாதிரி அதன் வழியில வருகிற அத்தனை வழிதவறிய குழந்தைகளையும் பிடிச்சு வச்சுக்குது.

சூரியனிடமிருந்து 775 மில்லியன் மைல்கள் தொலைவில் சுற்றி வரும் குரு,

நம்ம கிரகங்கள் சுற்றி வரக்கூடிய சுற்றுப் பாதைகள் சூரியனுடைய மையப்பகுதியை விட குருவோட மையப்பகுதிக்கு கிடைமட்டமா இருக்குன்னு சொல்லலாம்.

குரு ரொம்ப வேகமா சுததறதால நம்ம ஊரில பருவக்காற்றுகள் இருக்கிற மாதிரி அங்கு சூறாவளி மிக அதிகம். அதிவும் எதிர் எதிர் திசைகளில் அதைவேகமா நகருவதைப் தொலை நோக்கிகளில் பார்க்கலாம்.

[media]http://upload.wikimedia.org/wikipedia/commons/7/76/PIA02863_-_Jupiter_surface_motion_animation.gif[/media]

இந்த மேகங்கள் அம்மோனியம் ஹைட்ரோ சல்ஃபைடால் ஆனவை. இவை 360 கி.மீ வேகத்தில் வீசுகின்றன. வண்ணப்பட்டைகள் சூரிய ஒளி விலகல், மேகங்களில் உள்ள வேதிப் பொருள்கள் இப்படி பல விதங்களில் வேறுபடுகின்றன.

மேகங்களில் சிறிய அளவிலான தண்ணீரும், மெலிதான ஒளி ஊடுருவும் வகையும் இன்னும் சில வகைகளும் இருப்பதாக தெரிகிறது.. குருவில் மின்னல்களும் இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் என்னன்னா, சூரியனில் இருந்து பெரும் வெப்பத்தை விட அதிக வெப்பத்தை குரு வெளியிடுகிறது.

சூரிய மண்டலத்தில் இன்னொரு சூரியன் உண்டாகும் என்றால் அது குருவாக இருக்கும்.

குருவின் நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு 22 டிகிரி தெற்குப்பகுதியில் ஒரு பெரிய சிவப்புப் புள்ளி தெரியும். இது மிகப் பெரிய நிலை கொண்ட சூறாவளி ஆகும். இதன் அளவெ இரண்டு மூன்று பூமியின் அளவைப் போன்றதாகும். 300 / 400 வருடங்களாக இதை வான்வியலார்கள் பார்த்துகிட்டுதான் இருக்காங்க.

செவ்வாயில் இறங்கிய மாதிரி குருவில் இறங்க முடியாது.. ஆனா என்ன? அங்க இருக்கிற சந்திரன் யூரோப்பா வில் தண்ணீர் ஆக்சிஜன் எல்லாம் இருக்கு அப்படின்னு சொல்றாங்க.. வெப்பநிலை மட்டும்தான் ரொம்பக் குறைச்சல். குருவின் காந்தப் புல பாதுகாப்பும் இருக்கறதால கதிரியக்க பிர்ச்சனைகளும் கம்மி..

ஆனா மிகப் பெரிய பிரச்சனை ஒண்ணு இருக்கு,,, குருவை முழுசா பார்த்த பின்னால் அந்த ஸ்டார் வார்ஸை பார்க்கலாம்..

குருவை இதுவரை ஆராய்ந்த செயற்கைக் கோள்கள்

பயனியர் 10, 11(குருவை ஆராய்ந்தவை); வாயேஜர் 1,2(குருவின் நிலவுகளை ஆராய); உலைசஸ், காசினி(சனிக்கிரகத்தை ஆராய), நியூ ஹாரிசான்ஸ்.(ப்ளூட்டோவை ஆராய)

ஷூ மேக்கர் வால் நட்சத்திரம், 1995 ல் தனது இறுதிப் பயணத்தில் 21 துண்டுகளாகச் சிதறி குருவின் மேல் விழுந்ததை கலிலியோ படமெடுத்தது.

குருவின் மேல் எந்த செயற்கைக் கோளையும் இறக்கி ஆராய்ந்து பயனில்லை. குருவை விட நம்மை மிகவும் கவரப் போவது குருவின் நிலவுகள் தான். ஏன்னா ஏன்னா, குருவின் நிலவான யூரோப்பாவில் தண்ணீர் பனிக்கட்டிகளாக இருக்கு.. .

ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடித்த பலப் பல சூரியக் குடும்பத்தைச் சாராத கோள்கள் குரு மாதிரி வாயு அடர்த்தி மிக்க கோள்கள்தான். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு 64 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமி, வெள்ளி, செவ்வாய் மாதிரி பாறைகளால் ஆன ஒரு கிரகத்தைக் கண்டு பிடிச்சி இருக்காங்க.

சூரியக் குடும்பம் ஒரு அரசியல் மேடைன்னா அதிக கல்வீச்சுக்கு ஆளாகும் முக்கியப் பேச்சாளர் குருதான்.

இதில ஒரு குழப்பம் இருக்குங்கோ.. ஒரு பக்கம் இத்தனைக் கல்வீச்சை குரு தாங்கினாலும் சூரியக் குடும்ப மேடை மேல கல்வீச்சு விழுவதற்கும் குருதான் காரணம் அப்படின்னும் சொல்றாங்க.

சூரியக் குடும்பத்தைப் பொருத்தவரை பெரிய கிரகங்கள் மட்டுமில்லாம விண்கற்கள் நிறைந்த பகுதிகளும் இருக்கு,

குருவுக்கும் செவ்வாய்க்கும் மத்தியில் அஸ்ட்ராய்ட் பெல்ட் (விண்கல் துகள்கள்) இருக்கு. நெப்ட்யூனுக்கு வெளியே குயிப்பர் பெல்ட் இருக்கு. இதிலதான் புளூட்டோ, ஹௌமியா மேக்மேக் மாதிரி குறுங்கோள்களும் இருக்கு. அப்புறம் ஸ்கேட்டர்ட் டிஸ்க் எனப்படும் சின்ன சின்ன குறுங்கோள்களைக் கொண்ட, கோள்களின் சுற்றும் தளத்திற்கு வேறு கோணத்தில அமைந்த வட்டு, அதுக்கும் வெளிய ஊர்ட் மேகம் என்கிர மாதிரி பல விண்துசிக் கற்கள் கொண்ட மேகம் இருக்கு.

நம்ம குருவோட ஈர்ப்பு விசையால இங்க இருந்து கற்கள் பறந்த சூரியக் குடும்பத்தில வீசப்படறதாக வதந்தி உலவுது.

அதனால குருவை பார்த்து நாயகன் படம் மாதிரி நீங்க நல்லவரா கெட்டவரா அப்படின்னு கேட்டா .. தெரியலையேம்மா அப்படின்னு சூப்பர் பர்ஃபார்மன்ஸ் குடுக்கும்..

குருவை விட நமக்கு அதிக சுவாரஸ்யத்தைத் தரக் கூடியது அதோட 63+ சந்திரன்கள் தான்.

ஏன் 63+? குருவுக்கு தற்காலிக சந்திரன்கள் உண்டு.. அதாவது போற போக்கில சில பெரிய விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் கொஞ்ச நாள் குருவைச் சுத்திட்டு போறது உண்டு..

http://www.newkerala.com/nkfullnews-1-111557.html

இந்தச் செய்தியைப் பாருங்க.. குஷிதா முரமத்ஸூ (ஹிந்தியில் மத் என்றால் வேணாம் னு அர்த்தம். பாருங்களேன், குஷி தா முறைக்காதேன்னு சொல்ற மாதிரி பெயர் வச்சவங்களுக்கு தமிழ் – ஹிந்தி தெரியாதுன்னு நினைக்கிறேன்.) 1949 லிருந்து 1961 வரை சுற்றி வந்ததாம்.

குருவுக்கும் செவ்வாய்க்கும் இடையில் உள்ள அஸ்ட்ராய்ட் பெல்ட்டிலிருந்து சில கற்களை இப்படி தற்காலிக மனைவியா (18 கற்கள் என சிமுலேஷன் பண்ணிச் சொல்றாரங்க) மாத்திக்கிறதா குஷிதோ ஓட்சுகா சொல்றார்.

ஷூ மேக்கரும் இப்படித்தான் குருவால் கவரப் பட்டதாம்.

குரு காதல் மன்னன்தான்.