மனிதனின் இறப்பை துல்லியமாகக் கணிக்கும் செயற்கை நுண்ணறிவு (GOOGLE AI)

464

Google நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) மனிதனின் இறப்பு வாய்ப்பை 95 சதவீதம் துல்லியமாகக் கணிக்கும் திறன் வாய்ந்தது என நிரூபணம் ஆகியுள்ளது.

அறிவியல் உலகில் வியப்பூட்டும் கண்டு பிடிப்பு செயற்கை நுண்ணறிவு. எளிமையாகச் சொல்வதானால் செயற்கை மூளை. உலகின் பல முன்னணி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதில் போட்டியிடுகின்றன.

தகவல் தொழில்நுட்பத்தில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்க வைத்திருக்கும் கூகிள் நிறுவனமும் செயற்கை நுண்ணறிவை உருவாக்க முயலும் போட்டியில் உள்ளது.

அண்மையில் அந்நிறுவனம் மனிதனின் இறப்பைக் கணிக்கும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கி அதன் கணிப்புத் துல்லியம் 95% என நிரூபித்துள்ளது.

 மார்பகப் புற்று முற்றிய பெண்ணின் இறப்பு வாய்ப்பு வீதம் 9% என மருத்துவர் குறித்துள்ளார். அப்பெண்ணின் மருத்துவத் தரவுகளை கூகிளின் செயற்கை நுண்ணறிவு AI 1,75,639 இடம் கொடுத்த போது இறப்பு வாய்ப்பு வீதம் 19.99% என செயற்கை நுண்ணறிவு குறித்துக் கொடுத்தது.

இவ்விரு இறப்பி வாய்ப்பு வீதத்தின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் வாழ் நாட்கள் கணிக்கப்பட்டன. இறுதியில் அந்தப் பெண் செயற்கை நுண்ணறிவு குறிப்பிட்ட நாளுக்கு அடுத்த நாள் மரணமடைந்துள்ளார்.

அதாவது மருத்துவர் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே இறந்து விட்டார். இதன் மூலம் கூகிளின் செயற்க்கை நுண்ணறிவின் “இறப்பு வாய்ப்பு வீதக் கணிப்பு” 95 வீதம் துல்லியமானதென நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனிதனின் நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மனித நுண்ணறிவை விட திறன் வாய்ந்ததாக உள்ளமை அறிவியலாளர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவுகளைப் போரில் பயன்படுத்த பல நாடுகள் முயன்று வரும் நிலையில், உயர் திறன் வாய்ந்த செயற்கை நுண்ணறிவை மனிதனால் கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டால்  விளைவுகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தால் அந்த அச்சம் அனைவருடமும் படரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.