- அல்பெர்ட்டி ( 1404- 1472)
பிரான்செஸ்கா ( 1412- 1492)கட்டடக்கலை பற்றி கி.பி. முதலாம் நூற்றாண்டில்
ரோமானியரான விட்ருவியஸ் On Architecture என்ற நூலை எழுதி
கலைகளின் மறுமலர்ச்சி ( Renaissance) சகாப்தத்தைத் தொடங்கிவைத்தார்.இக்காலகட்டத்தில்தான் கலைகளில் மெய்நிகர் – தத்ரூபம் எனப்படும்
மெய்மை (Reality) -யைக் கொண்டுவர மேதைகள் முயன்றார்கள்.
இத்தாலியின் ஓவியர்கள் இருபரிமாண ஓவியத்திரைகளில்
முப்பரிமாண மெய்மையைக் கொண்டுவர ஆசைப்பட்டார்கள்.
அதைச் செய்ய முதலில் கண்டுணர்தல் ( Perspective) பற்றி
சில அடிப்படை விதிகளை புரிந்துகொண்டார்கள்.சதுரங்கப்பலைகைபோல் கறுப்பு- வெள்ளைச் சதுரங்கள் தரையை
வரையவேண்டும். அதன் மேல் நிற்கும் நபர்கள், உள்ள பொருட்கள்
நம் பார்வைக்கு – சிலர் சற்று முன்னே, சில(ர்) அதன் பின்னே
என ஒரு மேடைக்காட்சி போல் முப்பரிமாணத்தில் உணரப்படவேண்டும்.எப்படி வரைவது?
இந்த சூத்திரங்களை மேதாவிகளுக்கு மட்டுமே புரியும் வகையில்
சிக்கலாய் லத்தீன் மொழியில் முதலில் எழுதியவர் – அல்பெர்ட்டி.
அதையே பல ஓவியர்களுக்கும் பயன்படும்வண்ணம் எளிய நடையில்
எழுதி பிரபலப்படுத்தியவர் – �பிரான்செஸ்கா.இந்த விதிகளை விளக்கும் பின்னாளைய நூல்களுக்கு
எடுத்துக்காட்டு ஓவியங்கள் வரைந்தவர் – நம் எல்லோருக்கும்
பரிச்சயமான மோனலிசா வரைந்த லினார்டோ டாவின்சி.http://www.mos.org/sln/Leonardo/Expl…rspective.html
அல்பெர்ட்டி,�பிரான்செஸ்கா எழுதிவைத்த விதிகளே பின்னர்
இன்னும் சிக்கலான வடிவங்கள், மனித உருவங்களை
‘மெய்மை’யுடன் வரைவது வரைக்கும் மேம்படுத்தப்பட்டன.இருபரிமாணத் திரையில் முப்பரிமாணக் காட்சியுணர்வைத்தர
இம்மேதைகள் செய்த பணி –
இன்று நாம் பார்வைக்கு சிறியதாய்த் தெரியலாம்.ஆனால் , அன்று ‘தட்டை’யாய் மட்டுமே ஓவியம் எழுதிவந்த
காலத்தில், ஒரு புதிய பரிமாணம் கொடுத்து,
அதைக் கணக்கிட விதிகள் அமைத்து
அதை விளக்கி நூல்கள் படைத்து-
கலைகளில் ரியலிசம் தேடும் அத்தனை படைப்பாளிகளின் தேடலுக்கும்
வித்திட்டவர்கள் இவர்கள் என்பதால்–அல்பெர்ட்டி, �பிரான்செஸ்கா இருவரையும்
இம்மைல்கல்லின் (கலை)நாயகர்களாய் நினைவுகூர்வோம்.