உலக கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற இளைய வயவன்.

523

கல்வியாளர்கள், கலையாளர்கள், போர்வீரர்கள், விளையாட்டு வீரர்கள், உழைப்பாளிகள் எனப் பல் தரப்பட்ட திறனாளர்களால் எழுதப்பட்டது வயவையூரின் வரலாறு.

குறிப்பாக வயவையின் மின் மின் மன்றம் விளையாட்டுத்துறையில் பதிவு செய்த சாதனைகள் வயவையின் சிறப்பின் சிகரங்கள்.

ஊரோடு நாமும் நம்மோடு மின் மின் மன்றமும் இருந்திருந்தால் உடல்வலுவும் உள உரனும் இயல்பிலேயே கொண்ட வயவர்கள் இன்னும் எவ்வளவோ சாதனைகள் படைத்திருப்பர் எனும் ஏக்கம் எங்களுக்குள் நிச்சயம் இருக்கும்.

அவ்வேக்கத்தை துடைக்கும் முகங்களாக வெளிநாடுகளில் வாழும் இளம் வயவர்கள் தோற்றங்கொண்டு வருகின்றார்கள்.

அவ்வாறாக இளைய வயவன் ஒருவர்தான் ஓவியன். பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வதேசக் கராத்தே போட்டியில் பங்கு கொண்டு பதக்கம் பெற்று பெருமை அடைந்துள்ளார்.

இவரைப் போன்ற இளைய வயவர்கள் அடையும் மைல்கற்களும் உயரங்களும் அவர்களைப் பெற்றவர்களுக்கு மட்டுமன்றி எங்கள் எல்லோருக்கும் பேருவகை ஊட்டும் பெருமிதம் ஆகும்.

கொண்டாடுவோம் வாருங்கள். வாழ்த்துகள் ஓவியன்.