நெதர்லாந்துப் பிரதமர் அலுவலகம் ஒன்றினுள் நுழையும்போது கோப்பிக் குவளை விழுந்து கோப்பி நிலத்தில் கொட்டுப்பட்டு விட்டது. அதை அவர் சுத்தம் செய்த காட்சி பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு சமூக வலைத்தளங்களில் பிரபல்யமாகி விட்டது.
அவருடைய உணவை அவர்தான் உண்கிறார்.
தாமெடுத்தால் தான் தான் தண்ணி குடிக்கிறார்.
அதே வரிசையில் தான் சிந்திய கோப்பியை தானே துப்புரவு செய்கிறார்.
இதில் என்ன விசித்திர ஆச்சரியம் உள்ளதென்று பெரிதுபடுத்தப்படுகிறது.
பிபிசி இதனை புதினமாக்க, நம்மக்கள் இதை ஏதோ விசித்திர வியப்பாக நோக்க..
மனிதர்கள் மறைந்து பதவிகள் மட்டும் வாழும் இடமாக உலகம் மாறுவதற்கு சாட்சி சொல்கிறது, சம்பவ அதிர்வுகள்.