சுக்கிரன் – வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க – 4

521

அடுத்து வரிசையில் வானில் மிகப் பிரகாசமாகத் தெரியக் கூடியது

காதல் தேவதை, அதிர்ஷ்டகாரகன், அசுர குரு, திருமணத்தின் அதிபதி.. இப்படி பலவாறு வர்ணிக்கப்படும் சுக்கிரன்..

சுக்கிரன் சூரியனில் இருந்து 10.8 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றி வரும் கோளாகும். இது சூரியனிலிருந்து இரண்டாவதாக இருக்கிறது, அதே சமயம் பூமியை விட குறைந்த தொலைவில் இருப்பதால் சூரியனுக்கு மிக அருகிலேயே தெரியும், இன்று கூட சூரிய மறைந்த உடன் வானில் மேற்கு திசையில் பிரகாசமாகத் தெரியும்.

வெள்ளிக் கிரகம் ஏறத்தாழ பூமியின் அளவே உள்ளது. ஆனால் திருமணத்தில் உள்ள கொதிப்புகள், வெப்பங்கள், எரிமலைகள் போல இதன் மேற்பரப்பும் பலத்த கொந்தளிப்புகளுக்கு ஆளானது.. சூரியனுக்கு அருகில் இருப்பதால் என்கிறீர்களா? ஹோல்டன் ஹோல்டன்.. பொறுங்க..

புதனை விட சுக்கிரனில் வெப்பம் அதிகம். சுக்கிரனின் வெப்பநிலை 462 டிகிரி செல்சியஸ் ஆகும். ஏறத்தாழ இதே வெப்ப நிலை எப்பொழுதும் நிலவுகிறது..

சுக்கிரன் சூரியனை மற்ற கிரகங்களைப் போலவே எதிர் கடிகாரச் சுற்று முறையில் சுற்றி வருகிறது. இது சூரியனை ஒரு சுற்று சுற்றி வர 224.7 நாட்கள்.

இப்பதான் உங்களுக்கு அதிர்ச்சி தரப் போறேன்,,,

சுக்கிரன் தன்னைத் தானே சுற்றுவது கடிகாரச் சுற்றின் படி. அதாவது பூமி உட்பட்ட எல்லா கிரகங்களும் சூரியனைச் சுற்றுவதும் தன்னைத் தானே சுற்றுவதும் ஒரே திசையில்தான் (எதிர் கடிகாரச் சுற்று).

சுக்கிரன் மட்டும் இவ்வாறு சுற்றக்காரணம் விண்கல் ஒன்று இடித்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இன்னும் எனக்கு அது சரியாகத் தோன்றவில்லை… (காரணம், விண்கற்கள் கூட சூரியன் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் திசையில் தான் நகர்கின்றன, எனவே எதிர் திசையில் ஒரு விண்கல் இடித்திருக்கும் என்பதை நம்ப இயலவில்லை.

(வேறொரு தியரி வச்சிருக்கேன் மக்கா.. இது என்னோட ஆராய்ட்சி)

சரி சுக்கிரன் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எவ்வளவு காலம் ஆகுதுன்னு பார்ப்போமா? 243 நாட்கள்.

அதாவது சுக்கிரனில் ஒரு வருடத்தை விட ஒரு நாள் பெரியது.

என்ன அதுக்குள்ள தலையில கையை வச்சுகிட்டீங்க.. இன்னும் இருக்கே..

சுக்கிரனில் சூரியன் மேற்கு புறமாய் உதிக்கும். 58.4 நாட்களில் கிழக்கில் சூரியன் அஸ்தமனமாகும். இரவின் நீளம் 58.4 நாட்களாகும். ஆக கூட்டினால் 116.8 நாட்கள்தான் அதனால் ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதற்குள் இரண்டு நாட்கள் போலத் தெரியும்.

இதனால் சுக்கிரனைப் பொறுத்தவரை அனைத்து நட்சத்திர மண்டலங்களையும் இரண்டே நாட்களில் பார்க்கலாம்,

இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் சந்திரனைப் போலவே சுக்கிரனும் பூமிக்கு ஒரு முகத்தை மட்டுமே காட்டுகிறது. அதாவது பூமியின் ஈர்ப்பு விசை சுக்கிரனை வெகுவாக பாதிக்கிறது. அதனால் நிலாவைப் போலவே சுக்கிரன் சுழல்வதும் பூமிக்கு ஒத்திசைவில் இருக்கிறது.

அதாவது சுக்கிரனின் சுயசுழற்சி பூமியினால் பாதிக்கப்படுகிறது…. ஆனால் சுக்கிரன் சூரியனின் பிடியில் இருந்து தப்பிக்க இயலவில்லை, இதனால் கணவனுடன் போகும் பொழுது காதலனை ஓரக்கண்ணால் பார்ப்பதைப் போல பூமிக்கு ஒத்திசைவில் சுழல்கிறது,

சுக்கிரனுக்கும் வளர்பிறை தேய்பிறை உண்டு,, அதை விண்ணோக்கியில் மட்டுமே காணமுடியும்.

சுக்கிரன் ஏறத்தாழ கோளவடிவம் கொண்டது.. அதன் அச்சும் ஏறத்தாழ செங்குத்தாக உள்ளது, அதனால் அங்கு பருவகாலங்கள் இல்லை..

அது சுற்றும் பாதையும் ஏறத்தாழ வட்டமாக உள்ளது…