கல்லடியானே நீ வாழ்க

350

ஆசுகவியே வாழ்க
வயவைக்கு பெருமை சேர்த்த கவியே வாழ்க
வயாவிளான் மைந்தனே வாழ்க
கல்லடியானே வாழ்க

பெருத்த ஊர் வயாவிளான் என
உன் நாவால் பாடிய கவியே வாழ்க
மாற்றோர் உன்னை
கல்லடியான் ஆசுகவி, கொண்டாடினான் ஒடியல்கூல், என அழைக்க,
வயாவிளான் மைந்தன் நான் எனக் கூறிய கவியே வாழ்க

நட்புடன் பழகி
கொண்டாடினான் ஒடியல்கூல் எனப் பெயரெடுத்த கவியே வாழ்க
எதிரிகளை நேருக்கு நேர் நின்று உன்
சொல்லால் வென்ற கவியே வாழ்க
எதிரிகளும் உன் கவி கண்டு உன்னை
ஆசுகவி என அழைக்க வைத்த கவியே வாழ்க

உன் புலமை கண்ட அரசு
கொண்டாடினான் ஒடியல்கூல் எனத் தலைப்பிட்டு
கல்வி ஊட்டியது
கவியே நீ வாழ்க
வயாவிளான் மைந்தனே உன் புகழ்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க