இங்கிலாந்து – குரோசியாவும் மோதும் அரை இறுதிப்போட்டி இன்று.

196

 

உலகக்கிண்ண உதைபந்தாட்டம் 2018 இன் கடைசி அரை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும் குரோசியாவும் மோதுகின்றன.

1966 ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் உள்ள இங்கிலாந்தும் முதன் முதலாகக் கிண்ணத்தை வென்றிடும் உறுயுடன் உள்ள குரோசியாவும் இன்றைய அரை இறுதியில் ஆடுகின்றன.

உலகை ஆட்டிப் படைக்கும் முக்கிய இரு விளையாட்டுகளான உதைபந்தாட்டமும் கிரிக்கெட்டும் பிறந்த இடம் இங்கிலாந்து ஆகும். ஆனால் இது வரை இங்கிலாந்து ஒரு தடவை கூட கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லவில்லை. 

உதைபந்தாட்டத்தைப் பொறுத்தவரை 1966 ஆம் ஆண்டு ஒரு முறை கோப்பையை வென்றது. அதன் பின் கிண்ணம் கனவாக உள்ளது. இந்நிலையில் இளவட்ட வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அரை இறுதியில் குரோசியாவை சந்திக்கிறது.

அண்மைக்காலங்களில் நடந்த உலகக்கிண்ணங்களில் காலிறு, அரை இறுதி என வந்து கிண்ணத்தை நெருங்க முடியாமல் திரும்புவது குரோசியாவின் பழக்கமாக உள்ளது. ஆனால் இந்த முறை பல ஜாம்பவான் அணிகளை வேருட்டித் தள்ளி இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குரோஷியா வென்றே தீரவேண்டும் என்ற உறுதியோடு இங்கிலாந்தை சந்திக்கின்றது.

நிராசைகளில் நீந்தி வந்திருக்கும் இவ்விரு அணிகளும் ஆடும் இன்றைய அரை இறுதி உக்கிரம் தெறிக்கும் போட்டியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.