தேசிய மருத்துவர்கள் நாள்

(நீதிக்கான தேடலின் ஒரு பகுதியாக இந்தக் குறுங்கட்டுரையை அதிகம் அதிகம் சமூக வலைத் தளங்களில் பகிருமாறு டொக்ரர் ஆன்ரியின் அன்புக் கணவரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.)

“தேசநலன் எனது கடன்
தேன்தமிழே எனது திடன்”

கடினமிகு காலங்கள் முழுவதும்
வட கிழக்கு மண்ணில் நிமிர்ந்து நின்று மானுட வலிகளை வென்றவர் வைத்தியக் கலாநிதி பத்மலோஜினி கரிகாலனை அவர்கள்.

What a higher aim can man attain than conquering the Human pain!

“மானுட வலிகளை வெல்வதைவிட
உயர்ந்த மானுட இலட்சியம் உலகில் உண்டோ!”

“டொக்ரர் ஆன்ரி” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட இவர் யாழ் இடைக்காட்டில் ஓர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்.

எம் மண்ணில் மானுட வலிகளை வெல்வதற்காய் ஓய்வின்றி, உறக்கம் கடிந்து, அச்சம் தவிர்த்து நெடுந்தூரம் பயணப்பட்டவர்.

அம்புலன்ஷ் சேவைகள்’ வடக்கு கிழக்கு மகாணங்களில் உருவாக்கப்படாத காலத்தில் முன் வைத்தியசாலைப் பராமரிப்பு(Pre-Hospital Care)சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்தியவர்.

கருத்துருவாக்கம் செய்து செயலுருவாக்கம் கண்டவர்.

முன் வைத்தியசாலைப் பராமரிப்புத் தொடர்பான இவரது செயலுருவாக்கம் காரணமாக பல ஆயிரம் உயிர்கள் போர்க்காலத்தில் காவு கொள்ளப்படாமல் தடுக்கப்பட்டது.

“தமிழர்தம் மண்ணில் மறுபடி அவதாரம் அரியாத்தை திருமதி
பத்மலோஜினி கரிகாலன்”என ஈழத்தேசத்தின் பெரியவர்களால்,கவிஞர்களால் வியந்துரைக்கப்பட்டவர்.

தாய்தமிழகத்து வீரவேங்கை
வேலுநாச்சியின் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் திருமதி
பத்மலோஜினி கரிகாலன்.

தேசிய மருத்துவர்கள் நாளில்(National Doctors’ Day)எம் மண்ணில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட ஈழமண்ணின் இந்த #மருத்துவ_அன்னையைப் போற்றுவோம்.

புனிதம் நிறை மனிதத்தை,

‘அகம்’தனில் ஆழ நினைந்து
‘கரம்’ குவித்து
‘சிரம்’ தாழ்த்துவோம்!