பெல்ஜியத்தை 1-0 இல் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பிரான்சு

329

பன்னிரண்டு ஆண்டுகளின் பின் உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆடத் தகுதி பெற்றுள்ளது பிரான்சு. 2006 இறுதிப்போட்டிக் கறுப்புச் சம்பவத்தின் பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்சு கிண்ணத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் எழுந்துள்ளது.

கடந்த 24 ஆட்டங்களில் தோல்வியை தழுவாத அணி. இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஒரு போட்டியில் கூடத் தோற்காத அணி.  RED DEVILS.. இந்த உலகக்கிண்ணத்தில் பெல்ஜியத்தின் பட்டப்பெயர். இதன் தமிழாக்கம் “செம்பிசாசு”. பொருத்தமான பட்டம்தான். இவ்வுலகக் கிண்ணத் தொடரில் பிசாசுத்தனமான விளையாட்டு பெல்ஜியத்தினுடையது. 

நேற்று நடந்த அரை இறுதியிலும் பிரான்சுக்கு எதிராக அதே பிசாசுத்தனமான விளையாட்டைக் காட்டியது பெல்ஜியம். பெரும்பாலும் பந்து பெல்ஜியத்தின் பக்கமே இருந்தது. ஆனாலும் தற்காப்பு ஆட்டம் ஆடிய பிரான்சு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்தது.

கிரிஸ்மான் வெட்டிய் தட்டிவிட்ட பந்தை லாவகமாக கம்பங்களுக்கு நடுவில் உதைத்தார் உம்முடி. அதன் பின்னர் பிரான்சின் உற்சாகத்தில் செம்பிசாசுகளின் வீரியம் கரைந்து போய் பிரான்சு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.