வயவை பழைய மாணவர் ஒன்றுகூடல்

99

வயாவிளான் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் – பிரித்தானியக் கிளையினர் நடத்தும் வருடாந்த ஒன்றுகூடல் எதிர் வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் நாள் நடைபெற உள்ளது.

புலத்தில் நம் கல்வியாலயம் தன்னிகரின்றித் திகழ பிரித்தானியக் கிளை பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக மாணாக்கரின் கல்வி மேம்படுத்துகைக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

அவர்களின் கரங்களை வலுவாக்க ஐரோப்பியக் கண்டத்தில் பரந்து வாழும் பழைய மாணவர்கள் அனைவரும் அவர்களோடு கரம் கோர்ப்பது இன்றி அமையாததாகும்.

அத்தகைய ஒரு வாய்ப்பாகவும், மீண்டும் எமது பள்ளிக்கு போகும் ஓர் அனுபவமாகவும் இந்த ஒன்றுகூடல் அமையும்.

எனவே வயவை அன்னையின் பழைய மாணவச் செல்வங்கள் அனைவரும் இந்த ஒன்றுகூடலில் கலந்திட அன்புடன் அழைக்கின்றார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.