தலைவர் தங்கிய நெஞ்சம் நிமிர்ந்தே நிற்கும் எந்நாளும்.

1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ் குடாநாட்டினை உலகிலேயே ஒழுக்கத்தில் சிறந்த ஒரு விடுதலை இயக்கம் ஆளுகை செய்து கொண்டிருந்தது.

வள்ளுவப் பெருந்தகை திருவாய் மலர்ந்த ஒழுக்கம் செயல் வடிவம் கண்டதோர் வண்ணமிகு காலத்தை ஈழத்தமிழினம் அழ அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது.

சுய ஒழுக்கம், சூழ்நிலை ஒழுக்கம் என அத்தனை வகையான ஒழுக்கங்களும் நடைமுறையில் இருந்த் காலத்தில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து கொண்டிருந்த போராளிகள், தன்னிகபொதுமக்கள் அனைவரும் பெருந்தலைவர் வழிகாட்டலில் ஒழுக்கசீலராய் மிளிர்ந்தனர்.

யாழ் வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளே போராளிகள் எந்த அவசரமான அத்தியவசியமான சூழ்நிலையிலும் கூட சீருடையுடன் செல்ல முடியாது!

எனக்கு நன்கு தெரிந்த வகையில் வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளே சீருடையில் சென்ற ஒரு போராளிக்கு கடுமையான தண்டனை கிடைத்தது!

பல்கலைக் கழகத்திற்கு உள்ளேயும் யாரும் சீருடையுடன் நுழைய முடியாது என்ற பொதுவான சட்டம் உலகளாவிய அளவில் நடைமுறையிலிருந்தால் அதனையும் நம்மவர்கள் நன்றாக மதித்துப் போற்றினர்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே
பகிடிவதைப் பிரச்சனையினை பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் சுமூகமாக பேசித் தீர்ப்பதற்காய் சென்ற காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் சீருடை களைந்து சிவில் உடை தரித்துச் சென்ற வரலாறு உண்டு.

அஃதே,

எங்கள் மடுமாதா தேவாலயத்தினை சுற்றியுள்ள ஒரு கிலோ மீற்றர் சுற்றளவு பிரதேச புனித வலயத்திற்குள்ளே யாரும் அவசர பணிக்காகக் கூட சீருடையுடன் செல்ல முடியாது!

மடுத்தேவாலய நிர்வாகத்தினரின் அந்தக் கட்டுப்பாட்டினை மீறி யாரும் வரிச்சீருடையுடன் அப்பிரதேசத்திற்குள்ளே சென்றால் தண்டனை கிடைக்கும்!

அதிலும்…

யாராவது ஒரு வண பிதா மேலிடத்திற்கு கடித மூலம் தெரியப்படுத்தினால் அந்த போராளியை வீட்டிற்கு கலைத்துவிடும் அளவுக்கு கடுமையான தண்டனை நடைமுறையில் இருந்தது!

சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டிய
இந்தச் ஶ்ரீ லங்கா காவல்துறை அதிகாரியின் இழிசெயல் பல தமிழர்களையும் புண்படுத்தி உள்ளதுடன் மாந்த அறங்காவலர் தன்னிகரில்லாத் தலைவரை தாங்கும் நெஞ்சமாய் நிமிரவும் வைக்கிறது.