கடிதம்

473

கடிதம் 

மனித வளர்ச்சியில் மிகவும் முக்கிய பங்கினை வகித்துக்கொண்டிருக்கிறது. இன்றைய கணினி யுகத்தில்கூட ஈமெயில், facebook எனப்பல வழிகள் இருந்தும் கடிதத்தின் பயன்பாடு குறையவில்லை.

மனிதன் ஆரம்ப காலத்தில் சிறு பகுதியில் வாழ்ந்து பின் சிறு சிறு குழுவாக பிரிந்து வாழ்ந்தபோது கருத்துப் பரிமாற்றம் இன்றி சிரமப்பட்ட பொது பறவைகள் மூலம் தொடர்பை செய்தனர்.

இதில் குறிப்பாக புறா தொடர்பு மிகவும் பிரபலம். பெரும்பாலான மன்னர்கள் இப்படி செய்தனர். இதிலும் பெரும் செல்வந்தர்கள், ராஜாக்கள், ராணிகள் என பலர் தங்கள் இன்ப, துன்பங்கள், ஆசைகள், காதல், என பல தொடர்புகளை வைத்தனர்.

பின் கடல், தரை மார்க்கமாகப் பாதைகள் அமைத்துக் கடிதப் போக்குவரத்து நடத்தது. இதனால் பல இனங்கள், நாடுகளுக்கு இடையில் பல நன்மை தீமைகள் ஏற்பட்டது.
பின் ஆகாய மார்க்கமாக தொடர்புகள் ஏற்படுத்தி சென்றடையும் காலம் மிக குறுகியதாக மாறியதுடன், மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஒருவர் தான்விரும்பிய காலத்துக்குள் சொல்ல வேண்டிய செய்திகள், நன்மை, தீமை, பொருள்கள் என பலவகை செயல்களை செய்யக்கூடியதாக இருந்தது.

எமது முன்னோர்கள் காகம் கத்தினால் தபால் வரப்போகிறது என சொல்லி மகிழ்வார்கள். அதில் எழுதப்படட தகவல் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அதனை பலமுறை படித்து பார்த்து சந்தோஷப்படுவார்கள். அதோடு பலருக்கு காட்டியும் சந்தோஷப்படுவார்கள். அவைகளை தினமும் படிப்பதுடன் பாத்திரமாகவும் வைப்பார்கள்

.

மலரும் நினைவுகள் வரும்போது மறுபடியும் படித்து மகிழ்வார்கள். எழுத்தின் தன்மை அழகினை பார்த்து ஆனத்தம் அடைவார்கள். அதிலும் காதலர்களுக்கு ஏற்படும் ஆனந்தத்துக்கு வார்த்தைகளே இல்லை. காதலர்களால் தபால் காரர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையே ஆச்சரியம். ம்ற்றவர்களுக்கு தெரியாது இருக்க தபால் காரர்களை கைக்குள் வைத்திருப்பார்கள்.

இன்றைய கணினி யுகத்தில் கூட எத்தனையோ வசதிகள் இருந்தும் கடிதத்தின் பயன்பாடு தேவை.

அன்புடன்
வ.பொ.சு==மாரிட்டி மண்ணின் மைந்தன்