இலண்டன் மாநகரை குறுக்கறுத்து ஓடும் தேம்ஸ் நதி(Thames River)உலகப்புகழ் பெற்றது.
தேம்ஸ் நதியை விட அதற்கு மேல் கட்டப்பட்ட பாலங்களில் ஒன்றான இலண்டன் பிரிட்ஜ் (London Bridge) இனை அறியாத சிறு பிள்ளைகளே இருக்காது என நினைக்கிறேன்.
அழகிய வளைவு நெளிவுகளின் தாயகம் இதுதானோ எனப்பிரமிக்க வைக்கும் கலை அன்னங்களும் தமக்கென ஓர் வரலாறைக் கொண்டிருக்கிறது.
தேம்ஸ் நதியில் வாழுகின்ற அன்னங்கள் பிரித்தானியாவின் அரச குடும்பத்துக்குரியவை ஆகும். பிரித்தானிய அரசகுடும்ப அரண்மனை நிர்வாகத்தால் வருடத்துக்கு ஒரு முறை அவை எண்ணிக் கணக்கிடப்படுகின்றன. அத்துடன் அவரிற்கு அரசகுடும்ப மிருக வைத்தியர்களாலேயே மருத்துவம் செய்யப்படுகிறது.
இந்த அதி உயர் ஜீவகாருண்ணியச் செயற்பாடு கடந்த 800 வருடங்களாக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றமை என் போன்ற சிறுவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
ஆக்கம் – ஒளிமாறன் தர்ஷன்