வயவையூர் மக்களில் ஒரு தொகுதியினருக்கு அவசரகால உதவிகள் வழங்கப்பட்டன.

109

12.04.2020 ஞாயிற்றுக்கிழமை வயாவிளான் சுந்தரபுரம் கிராமத்தில் உள்ள 175 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் (அரிசி, மா, சீனி, பருப்பு, சோயாமீற், உப்பு), சர்வதேச வயாவிளான் மக்கள் ஒன்றியத்தால் வழங்கப் பட்டது.

இக்கிராமத்தில் இருக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப் பட்டது. இதற்கான நிதிப் பங்களிப்பை பன்னாட்டு புலம் பெயர் வயவை உறவுகள்  வழங்கி உதவினார்கள்.

இது எமது மூன்றாம் கட்ட வேலைத்திட்டம். இது வரையில் வயவையில் 350 குடும்பங்கள் எமது இந்த திட்டத்தினால் பயன் அடைந்துள்ளார்கள்.

இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பான்மையினர் அன்றாடம் உழைத்து வருமானம் பெற்று வாழ்பவர்கள். ஊரில் உள்ள ஊரடங்குச் சட்டம் இவர்கள் தொழிலை முடக்கியுள்ளது. உழைக்க மனமிருந்தும் உழைக்கச் செல்ல இயலாத நிலையில் இவர்கள் உள்ளார்கள்.

பன்னாட்டுப் புலம்பெயர் வயவர்களின் பங்களிப்புடன் இவர்களுக்கு  வழங்கப்பட்ட  அவசரகால உதவியை வயவையின் அனைத்துப் பகுதிகளுக்கும் கட்டம் கட்டமாக விரிவுபடுத்த உள்ளோம்.

இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் நாடி நிற்கின்றோம். உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவில் தான் எமது மனிதநேய பணி தொடரும்.

எமக்கு நிதிப் பங்களிப்பு வழங்கியோருக்கும் எம்முடன் கைகோர்த்து நிற்கும் அனைவருக்கும், தாயகத்தில் எமது சங்கத்திற்கு தமது சேவையை செய்யும் தொண்டர்களும் எமது சர்வதேச வயாவிளான் மக்கள் ஒன்றியம் சார்பாக நன்றிகள் 🙏🙏🙏

🙏சர்வதேச வயாவிளான் மக்கள் ஒன்றியம்🙏