தாயகத்தின் இன்னோரன்ன அழகு.

AN ANOTHER BEAUTY OF OUR TAMIL NATION!🦋

 
மாங்கனித் தீவில் தமிழர் தேசத்துக்கு அழகு சேர்க்கும் இன்னுமோர் பூ!
 
  1. தொட்டாற் சுருங்கி,
  2. தொட்டா வாடி,
  3. தொட்டாற் சிணுங்கி
 
எனும்இத்தாவரத்தின் தாவரவியற் பெயர் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்பதாகும்.

 

கால்பூட்டணிகள் அணியாது பொது வேலைகளில் காடு மேடெல்லாம் அலைந்த காலங்களில் எங்கள் கால்களை பதம் பார்த்த தாவரங்களில் இதுவும் ஒன்று!

புறவாழ்வின்
வலிகள் இன்றும் இருப்பினும்

“தொட்டாற் சுருங்கி பார்த்தல் உந்தன் வெட்கம் ஞாபகமே….”

என்ற அகவாழ்வு சம்பந்தமான பாடல் வரிகளும் சிந்தையில் வருகிறது.

ஆம்,கடவுள் எனும் பெருங் கலைஞனின் கைண்ங்ளை

தேடித் தேடிப் பார்ப்பதில்தான் எத்துணை மகிழ்ச்சி!😀

காலையில் மலர்ந்து
மதியமெல்லாம் “கள்” வடிந்து
மாலையில் தங்கள் காம்பை மறக்கும் பூக்கள் தரும் செய்திகள் ஆயிரம் ஆயிரம் ஆகும்.

தொட்டா சிணுங்கியின் சங்க இலக்கிய பெயர் ஈங்கு..
இங்கு  ஈங்கு  ஈங்கை = இங்கு கை வைத்துச் சுருங்குதலால் = ஈங்கை

தொட்டதும் இரு கரங்களை குவித்து வணக்கம் சொல்வது போல் இலைகளை குவிப்பதால் இதனை ”ஆள்வணங்கி” என்ற பெயரிலும் அழைப்பார்கள்.

பாக்களில் இடம்பிடித்த பூக்கள் எங்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவை.

‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா….’

‘செவ்வந்திப் பூவெடுத்து அதில் உன் முகம் பாத்திருந்தேன்….’

என 80 களிலும் 90 களிலும்
சினி(மா)யிசையில் “செந்தாழம் பூவும்” செவ்வந்திப் பூவும்” வந்து கலக்கின.

சினியிசைக்கு முந்தியதும் முன்னுதாரணது எங்கள் தமிழிசை. தமிழிசையில் இடம்பிடித்த பல நூறு பூக்களை நாங்கள் அறிந்தது மிகவும் குறைவே!

காலையின் அர்த்தத்தை அதிகமாக்குபவை பூக்களும்,பூங்குருவிகளும்தான் என்பது ஞானோதயம் வந்தவர்களுக்கு நன்கு புரியும்.

புலன்களைக் கவர்ந்து இழுத்து
மனதோரம் கவிதை சொல்லும்
பூக்களை மனதில் நினைக்கும் போதே காதலும்,பக்தியும் சொட்டுகிறது.

திருவூராம் எங்கள் வயவையின் மேய்ச்சல் நிலங்களை அலங்காரிக்கும் இவள் என் தோழி!

திருநாள் ஒன்றில் என்னூர் வந்து சிறுவயதில் என்னை மகிழ்வித்த உன்னிடமும் ஓர் நன்றி சொல்வேன் என் சிணுங்கியே!

என் செல்(வ)லமே! 💞