முப்பது ஆண்டுகளின் பின் சிறை மீண்ட வயவையூர் தெற்கு

498

வயாவிளான் தெற்குப் பகுதி 15 குடியிருப்புக்கள் நீங்கலாக முழுமையாக மீள்குடியேற்றத்திற்கு 19.6.2018 செவ்வாய்க்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ஞானவைரவர் ஆலயம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் பின் வீதி (மேற்கு) மேற்கு எல்லையாகவும், வடக்கு வீதி வடக்கு எல்லையாகவும் கொண்டு ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலயத்திற்கான பாதை விதானையார் ஒழுங்கை அல்லது கிழக்கே ஏற்கனவே விடுவிக்கபட்ட பகுதியில் உள்ள பாதையை பயன்படுத்தும் நிலை உள்ளது.

காலப்போக்கில் ஆலடிப்பாதையும் விடுவிக்கப்படும் சாத்தியம் உள்ளது.

தற்போது காணி உரிமையாளர்கள் ஆரவத்துடன் தமது நிலைகளை பலப்படுத்தி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டத்தை கட்டுப்படத்த ஆலய நிர்வாகத்தால் அறிவித்தல் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலீசாரும் வருகை தந்து தமது நடமாட்டத்தை உறுதிப்படுத்துகின்றனர். மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ நிலைகளுக்கு தற்போது இதனுாடாகவே இராணுவத்தினர் தமது (உணவு, தேனீர்) வளங்கல்களை செய்து வருகின்றனர். இந்த நிலைமையும் எமது உடமைகளுக்கு பாதுகாப்பானதாக உள்ளது. ஒரு இறுக்கமான பாதுகாப்பு நடைமுறையை ஆலய நிர்வாகம் செய்துள்ளமையால் பிறர் வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன். அவர்களுக்கு தயக்க நிலையையும் உருவாக்கியுள்ளது.

ஆலய நிர்வாகம் உடனடியாக இன்று வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளரை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதாவது, (1) வீதிகள் முழுமையும் திருத்துதல். (2) ஆலய வெளி-உள் வீதியை துப்பரவுசெய்து தருதல். (3) ஆலய கிணற்றை பாவனைக்குகந்ததாக திருத்திதருதல். (4) ஆண்-பெண்களுக்கென ஆலயத்திற்கு பொது மலசலகூடம் அமைத்து தருதல்.

இவை எதிர்வரும் திங்கள் தொடக்கம் செய்துதருவதாக உறுதியளித்தார். வயாவிளான் வரைபடத் தெளிவு தவிசாளரிடம் காணக்கூடியதாக இருந்தது. தவிசாளருக்கு மிக்க நன்றியை ஆலய நிர்வாகம் தெரிவிக்கிறது.

அடுத்து நாளை (21.6.2018) மின்சார இணைப்பிற்கான விண்ணப்பம் மின்சாரசபையிடம் கையளிக்க ஆலய நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

இவை விரைவாக நடபெறும் பட்சத்தில் உடனடியாகவே பாலஸ்தானம் செய்து வைரவருக்கு தினமும் ஒரு நேர பூசைவழிபாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடிய விரைவில் கிராமத்தின் நாலாபுறமும் வைரவரின் நாதமும், ஒளியும் பரவும்.

-வயாவிளான் வைரவர் முகநூலிலிருந்து –