வயாவிளான் மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கப் (பிரித்தானியக் கிளை) பொதுக்கூட்டம்

1538

தாயகத்தில் வேர்கொண்ட வயாவிளான் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் உலகெங்கும் கிளைபரப்பி பெரு விருட்சமாக வேண்டும் என்ற, முன்னாள் அதிபர் அமரர் திரு.ஆ.சி.நடராஜா அவர்களின் எண்ணக்கருவில் தோன்றிய முதல் பிள்ளை வயாவிளான் மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கப் பிரித்தானியக் கிளை.

எமது கல்லூரி மாணவ மணிகளின் கல்விப் பாய்ச்சலுக்கு உந்து சக்தி வழங்கி வருவோரிக் ஒருவரான பிரித்தானியக் கிளையின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூலை 7 அன்று நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்கால செயலாற்றுகை மேம்பாட்டு உரையாடலும் நடைபெற உள்ளது.

இப்பொதுக் கூட்டத்தில் பிரித்தானியாவில் வாழும் அனைத்துப் பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர் பிரித்தானியக் கிளையினர்.

காலம் – 07/07/2018

நாள் – சனிக்கிழமை

நேரம் – மாலை 6.30 மணி

இடம் –  41, Fernhall Drive, Ilford, Essex, IG4 5BW.

மேலதிக விபரங்களுக்கு : திருமதி.அருணா இராமச்சந்திரன் 07782154403