நாளொரு குறள் – 50

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : இல்வாழ்க்கை
செய்யுள் :10

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

தெய்வங்கள் யார்?

இந்தப் பூமியில் எப்படி வாழவேண்டும் என உதாரணங்களாக வாழ்ந்து காட்டியவர்களே வானத்தில் வாழும் தெய்வங்கள்.

பலரின் குலதெய்வங்கள் இப்படித்தான் உருவாகி இருக்கின்றன. பல சிறு தெய்வங்கள் இப்படித்தான் உருவாகின.

இல்லறம் என்பது என்ன? அதன் கடமை என்ன? அதன் பண்பு என்ன? அதன் பயன் என்ன? அதை எப்படிச் செய்தல் வேண்டும்? என்ன கூடாது? இலவாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதால் உண்டாகும் நன்மை என்ன? அதனால் பெறும் சிறப்பு என்ன?

இல்லறமல்லது நல்லறமன்று என்றது கொன்றை வேந்தன். மற்ற அறங்களைப் பேணும் பொழுது தெய்வத்தின் திருவடியை அடைவாய் எனச் சொல்வார்கள். இல்லறத்தைச் சரியாக மேற்கொண்டால் தெய்வமாகவே ஆகிவிடுவாய் என்கிறார் வள்ளுவர்.