(தூத்துக்குடி) தமிழனென தலை நிமிர்ந்து நில்

536

தமிழகத்தின் தூத்துக்குடி மக்களின் 22 வருட அறப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. 

தாமிர உற்பத்தி ஆலை மூடப்படும் என்று தமிழக முதல்வர் ஊடகச் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். புதிதாய் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரும் இதே கருத்தை கூறியதுடன் சுற்றுச்சூழல் சான்றிதழ் வழங்கப்படவில்லை… வழங்கப்பட மாட்டாது என்ற மேலதிக தகவலை தந்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்த பேராசிரியர் ஆலை விரிவாக்கம் செய்யப்படாது என்று தெரிவித்துள்ளார்.

நம்பகத்தன்மையை கவனத்தில் கொள்ளாமல் பார்த்தால் மக்கள் போராட்டம் வெற்றியே..

ஆலை இயங்காது என்ற வெற்றுக்கு அப்பால், வன்முறையை நம்மீது ஏவி, நம்மை வன்முறையாளர்களாக்கி, அரக்க குணம் கொண்ட கொடூரர்களாக தமிழரை சித்தரிக்கும் முயற்சி நமது கொள்கை மாறாத குணத்தாலும் மன உறுதியாலும் முறியடிக்கப்பட்டது தூத்துக்குடிப் போராட்டத்தின் இன்னொரு வெற்றி ஆகும்.

போராடினாலும் சாவோம். போராடவிட்டாலும் சாவோம்.. நாம் போராடிச் செத்தால் ஒருவேளை நம் சந்ததி வாழக்கூடுமெனும் தேசியத் தலைவரின் கூற்று, 11 பேர் உயிர் விட்டு எதிர்கால சந்ததி வாழ பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் ஈகம் வீண்போகாமல் இருக்க வேண்டும். என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.