வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியக் கிளையினர் இரண்டாவது முறையாக நடத்திய ஒன்று கூடல் நிகழ்வு கடந்த 03/02/2018 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தப்பட்ட நடனங்கள், நாடகங்கள் என மகிழ்வுறு நிகழ்வுகளுடன் தமிழரின் விருந்தோம்பல் பண்புடனும் ஒன்று கூடல் நடைபெற்றது.
200 க்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து கொண்ட இவ் ஒன்று கூடல், புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய தலைமுறையினரின் அரங்காற்றலை வெளிப்படுத்தியது.
பழைய நண்பர்களை நேரில் கண்டு, பால்யக் கதைகள் பேசி, மீண்டும் பள்ளிக்குப் போய் மீண்ட மகிழ்வை பலரின் முகங்களில் காணக்கூடியதாக இருந்தது.
ஆனாலும் ஒவ்வொருவரும் தனியன்களாக வந்தமை சிறு வருத்தம் தந்தாலும் இனி வரும் காலங்களில் குடும்பமாகக் கலந்து கொள்வோம் என உறுதி எடுத்துச் சென்றமை மகிழ்வுடன் வரவேற்கத்தக்க விடயமாகும்.
இம்முறை பிரான்சு வாழ் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். அடுத்த ஒன்று கூடல்களில் இன்னும் பலர் கலந்து கொண்டு, பிரித்தானியக் கிளையானது ஐரோப்பாக் கிளை என்ற வளர்ச்சியை எட்டி கல்லூரி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வயவனின் வாழ்த்துகள்.