ஒரு கலைநிகழ்சசி நடந்துகொண்டிருந்த இடத்தில் அதன் விலைப் பட்டியலில் கதிரை 2 ரூபாய் என எழுதப்பட்டிருந்தது. ஆசுகவி இது தவறு கதிரைக்கு 2 ரூபாய் எனப் போடுங்கள் எனச் சொல்ல அவர்கள் கேட்கவில்லை. இவர்கள் தவறை உணர்த்த ஐயா செயலில் இறங்கினர்.
2 ரூபாய் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சி பாத்துவிட்டுப் போகும் போது கதிரையையும் கொண்டுபோக, காவலர்கள் தடுக்க, நீங்கள் கதிரை 2 ரூபாய் என விற்றிர்கள்; 2 ரூபாய் தந்துவிடடேன். இப்போ கதிரை எனக்கு சொந்தம் என சொல்ல அப்போதுதான் அவர்களுக்கு தவறு விளங்கி கதிரைக்கு 2 ரூபாய் என மாற்றினார்.

ஆசுகவி அவர்கள் அடிக்கடி யாழ்ப்பாண நீதிமன்றம் போய் வருவது உண்டு. ஒரு முறை ஆசுகவிக்கு சிறுநீர் அவசரமாக வந்துவிட,பக்கத்தில் இருந்த மரத்தடியில் கழித்துவிடடார். இதை பார்த்த நீதிமன்றக் காவலர் ஆசுகவியை பிடித்து நீதவான் முன் நிறுத்தினார். நீதவான் அந்த இடத்தில் சிறுநீர் கழித்தால் 10 ரூபாய் அபதாரம் என விதித்தார். ஆசுகவி மறுநாளும் அதே தவறை செய்தார் மறுபடியும் நீதவான் 10 ரூபாய் அப தாரம் எனச் சொல்ல, ஆசுகவி நான் நேற்றே 10 ரூபாய் கட்டி அந்த இடத்தை வாங்கிவிட்டேனே எனச் சொல்ல நீதவனால் ஒண்டும் செய்ய முடியவில்லை.

ஆசுகவி அடிக்கடி நீதிமன்றம் சென்று அங்கு நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டுவர். அது நீதவானை சஞ்சலப்படுத்தியது. ஆகவே ஆசுகவியின் தலை நீதிமன்றப் பக்கம் தெரியக்கூடாது என நீதவான் சொன்னார். கடுமையாக சிந்தித்த ஆசுகவி ஒரு சட்டி கொண்டு தலையை மூடி மறுநாள் மன்றம் சென்றார். மக்கள் சிரிக்க, நீதவான் ஏன் சட்டி கொண்டு தலையை மூடினீர் என கேக்க, நீங்கள் தானே என் தலை நீதிமன்றில் தெரியக்கூடாது என்கிறீர்கள் இப்போது தெரியவில்லைத்தானே எனச் சொன்னார். நீதவான் ஐயனின் மதிநுட்பத்தை கண்டு பாராட்டினார்.

இப்படி பல திருவிளையாடல்கள்.

1 COMMENT