மறக்க(டிக்க)ப்பட்டு வரும் வரலாற்றுத் தமிழ்ப்பெயர்கள்

இலண்டனில் உள்ள இந்த வைத்தியசாலையைப் பார்க்கும் போதெல்லாம் “கம்பன் கிளினிக்” நினைவில் மலரும்.

கம்பன் கிளினிக் அன்று ஆவரங்காலில் (யாழ் நகரிலிருந்து வடமராட்சி செல்லும் பிரதான சாலையில்) அமைந்திருந்தது.

ஒரு நாள் என் அப்பாவிடம் வந்த நண்பர் கம்பனுக்கும் மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு எனக் கிண்டலாகக் கேட்டார்.

“அந்தக் கிளினிக்கினை உருவாக்கி பணி புரியம் வைத்தியர் திலகா அவர்களின் தம்பியின் பெயரை வைத்தியசாலை தாங்கியிருக்கிறது” எனக் கவலையுடன் சொன்னார்.

அப்பாவின் கவலைக்கு இரண்டு காரணங்கள் இருந்தது.

ஒன்று விடுதலைக்காகப் புறப்பட்ட கம்பனின் இழப்புத் தொடர்பானது.

இரண்டாவது தமிழுக்காய் வாழ்ந்த ‘கவிஞர்களின் பெயரையோ’ அல்லது ‘மன்னர்களின் பெயரையோ’ எங்கேயாவது பதிக்க வேண்டும் என்ற உணர்வு எம்மிடம் குன்றி உள்ளதே என்பதாகும்.

சிங்கள மக்களும் மாங்கனித்தீவில் வைத்தியசாலைகளுக்கு தங்கள் மன்னர்களின் பெயரைச் சூட்டவில்லை. (எனக்குத் தெரிந்த வரையில்)

இசுலாம் மக்கள் மட்டும் தம் அரசியல் தலைவர் அமரர் அஷ்ரப் அவர்களின் பெயரில் வைத்தியசாலை ஒன்றை (Ashraff Memorial Hospital) கிழக்கு மாகணத்தின் கல்முனை நகரில் அமைத்து உள்ளார்கள்.

தமிழ் மக்களாகிய நாங்கள்
முல்லைத்தீவில் மட்டும் ஓர் ஓட்டுத் தொழிற்சாலைக்கு “பாயும்_புலி_பண்டார_வன்னியன்” பெயரை வைத்திருந்தோம்.

ஆனால்…

அந்தப் பெயரும் இன்று மாற்றப்பட்டுள்ளது.

ஈழத்தில் உள்ள தேசப்பற்றுமிகு தமிழ்க்கல்வியாளர்கள்,புத்திஜீவிகள்
‘பெயர் மாற்றம்’ தொடர்பில் குரல் கொடுக்க மாட்டார்களா?