நாளொரு குறள் – 75

நாள் : 75
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அன்புடைமை
செய்யுள் :5

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

இவன் மட்டுமே எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறானே என சிலரைப் பார்க்கும் பொழுது தோன்றும்.

ஆயிரம் படை சூழ் அரசனுக்கும் இல்லாத நிம்மதியும் சந்தோஷமும் சிலருக்கு இருக்கும். அதன் அடிப்படைக் காரணம்தான் என்ன?

அன்புடைமை மட்டுமே அந்த நிம்மதியும் சந்தோஷமும் தரும் ஒரே உடைமையாக இருக்கவல்லது என்கிறார் வள்ளுவர்.

வாழ்வின் இன்பத்தை அன்புடையோரே அடைய இயலும். அன்பிலாதோர் அனுபவிக்கும் இன்பம் கூட அவருக்கு நிம்மதியும் சந்தோஷமும் தராது. அன்புடையோர் அனுபவிக்கும் துன்பம் கூட அவருக்கு நிம்மதியும் சந்தோஷமும் தரும்.

இன்பத்தில் இனிமையைத் தருவது அன்பு மட்டுமே.