பண்டைக்காலத்திலிருந்து இன்று வரை காலத்தை அளவிட பலமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் முதன் முதலாக கிரேக்கர்கள் நேரம் கணிக்கும் கருவியைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. T வடிவக் கருவி ஒன்றை சூரியன் உதிக்கும் திக்கில் நிறுத்தி வைத்து நேரங்கணித்தார்கள்.
இருளில் நேரம் கணிக்க முயன்ற போது நீர்க்கடிகாரமும் மணற்கடிகாரமும் உருவாகின. நீர்க்கடிகாரம் குறு நேரத்தை அளவிடத் தோதாக இருந்தது. மணற்கடிகாரம் நெடுநேரத்தை கணிக்கப் பொருந்தியது. காலப்போக்கில் நீர்கடிகாரத்தை விட மணற்கடிகாரமே பிரபல்யமானது. அதிகம் பயன்படுத்தப்பட்டது.
தற்காலத்தில் அரும்பொருளாக உள்ள மணற்கடிகாரத்தை கொண்டு மூளைக்கு வேலை கொடுக்கலாம்.
இரண்டு மணற்கடிகாரங்கள்.. ஒன்றால் 11 நிமிடங்கள் அளக்கலாம். மற்றயதால் 13 நிமிடங்களை அளக்கலாம். இவ்விரண்டு மணற்கடிகாரங்களையும் கொண்டு 15 நிமிடங்களை அளப்பது எப்படி?