சாதனையாளர்..

2008 ஆம் ஆண்டில் உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் வாரன் எட்வேட் பாஃர்பட். அமெரிக்காவின் ஒமாகா நகரில் பிறந்த இவரின் சாதனை இதுவல்ல.

இளமையில் வறுமை காரணமாக வீடு வீடாக புதினத்தாள் போடும் வேலையைச் செய்தவர் இவர். ஒரு கட்டத்தில் பங்குச் சந்தையில் ஆர்வம் ஏற்பட பங்குச்சந்தை நுட்பங்களை சுயமாகக் கற்றார். பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். கற்றுக் கொண்ட நுட்பங்களை பிரயோகித்து பெரும் இலாபம் ஈட்டினார்.

அவ்விலாபம் தந்த உற்சாகத்திலும், தன் திறன் மேல் கொண்ட நம்பிக்கையாலும் மற்றவர்கள் அஞ்சிய நிறுவனங்களில் கூட முதலிட்டார். வெற்றிக் கனியை சொல்லிப் பறித்தார். 

துணிச்சலான முடிவுகளை எடுக்கும் இளைஞனான இவருடைய நுண்ணறிவையும், முன்னேற்றத்தையும் கண்டு வியந்த நெப்ராஸ்கா பல்கலைக் கழகம் இவரை வகுப்பெடுக்க அழைத்தது. இதில் மெச்சத்தக்க விடயம் என்னவெனில் இவர் கற்பித்த வகுப்பு மாணவர்கள் இவரை விட இரு மடங்கு மூத்தவர்கள்.

தான் கற்ற வித்தையை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களுடனேயே போட்டி போட்டு முதலீடு செய்து முன்னேறிய இவர் கோடிக் கணக்கில் சொத்து வைத்திருந்தாலும் தற்போது வரைக்கும் தன் பழைய வீட்டியேலே வசிக்கிறார். ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ்கிறார். அலைபேசி அத்தியாவசியமான இக்காலத்தில் கூட அலைபேசி இல்லாமல் வாழ்கிறார். 

சேல்வச் செழிப்பிலும் எளிமையாக வாழ்வதை விட வேறு எது உயர்ந்த சாதனையாக இருக்கும்?