பணத்தை உருவாக்கியது மனிதனின் ஆசை. ஆதியில் பண்டமாற்ற முறையால் ஏற்பட்ட சிரமங்கள்,
தேவைகளுக்காகப் பணத்தை உருவாக்கினார். ஆனால் அதே
காசு மனிதர்களின் விலையை, நிலையை, தரத்தை, உலகத்தை
தீர்மானிக்கிறது.
உலகம் நீர், உணவு, காற்று இன்றிக்கூட இருக்கும், பணம் இன்றி வாழாது. பெற்ற தாய், தந்தையரே
பிள்ளைகளின் பண வசதிகளை பொறுத்தே பிள்ளைகளை
மதிக்கின்றனர். அதேபோல்தான் பிள்ளைகளும் உயிர் கொடுத்த தாய், தந்தை எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள்
எவ்வளவு தருவார்கள் என நினைக்கிறார்கள், நடக்கின்றனர்.
பொறுமையாக, நிதானமாக யோசித்து பார்த்தால் பணத்தால் எவ்வளவோ நன்மைகள் உண்டு. ஆதியில் போக்குவரத்து மிகவும் சிரமமாக இருந்ததால் பொருள்களைக் கொடுத்து பொருள்களை வாங்குவது மிகவும் கடினமாகவும், அலைச்சலாகவும், நேர வீணடிப்பாகவும் பெரும் சிரமமாகவும் இருந்தது.
ஒருவரிடம் உள்ள பொருளை மாற்றிக்கொள்ள வேண்டுமெனில், என்னிடம் உள்ள பொருளைக்
கொண்டு போகணும், அதே நேரம் என்னிடம் உள்ள பொருள் மற்றவருக்கு தேவைப்படணும். அத்தோடு பண்ட மாற்றத்துக்கு தேவையான
பொருள்களை கொண்டு போகக்கூடிய வசதிகள், உடல் வலிமை, ஆரோக்கியம் இருக்க வேணும். மிகவும் தொலை தூரத்தில் உள்ளவைகளை பண்ட மாற்று மூலம் வாங்குவது மிகவும் கடினமாகவும் முடியதாகவும் இருந்தது. இன்னொரு நாட்டில் இருப்பவைகளை வாங்குவதும் கடினமாகவும், இயலாதாகவும் இருந்தது. இவைகளுக்கு
மாற்றாக மிக இலகுவாக இருக்க பணம் உதவியது.
பணத்தின் தேவை,முக்கியத்துவத்தால் மனிதர்கள் பணத்துக்கு அடிமையானார்கள். இன்று பணம் இன்றி எதுகுமே இல்லை, நடக்காது. உலகில் நடக்கின்ற அனைத்துமே பணத்துக்காகத்தான், பணத்தால்தான். நாய் தின்னாக் காசு என வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அந்த நாய்க்கு சாப்பாடு போடவும் காசு தான் வேணும்,
பணம் எண்டால் பிணமும் வாய் திறக்கும், பிழையும் சரி எனப்படும். வயித்துக்குள் உள்ள பிள்ளையை வெளியில் எடுக்கவே பணம்தான் தேவை.
கடவுளை நம்புகிறமோ, இல்லையோ காசுதான் கடவுள் என கும்பிடுகிறோம். எல்லோரும் இறக்கும்போது
எதையுமே கொண்டுபோக முடியாது என தெரிந்தும் தங்கள் வாழ்நாளில் எவ்வளவு சொத்துக்கள், உடைமைகள், செல்வங்களை சேர்க்கின்றனர். எத்தனையோ தலைமுறைக்கு
சேர்க்கின்றனர். நீதியாவது, அநீதியாவது என நடக்கின்றனர்.
பணம் இன்றி ஒரு துளியும் வாங்க முடியாது என்பது உண்மை. ஆனால் காசுதான் வாழ்க்கை என வாழாது வாழ்க்கைக்கு காசும் வேணும்
என்ற மனதுடன் அன்பு, பாசம், கருணை, நீதி, ஒழுக்கம்,நோயற்ற வாழ்வு, தானம் இவைகளே சிறப்பு என வாழ்வோம்.
அன்புடன்
வா.பொ.சு—வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன