வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க – செவ்வாய்

செவ்வாய்..

செவ்வாய்க் கிரகம் சிவப்பு நிறம் கொண்டது. செவ்வாய் என்பது கிரேக்க புராணத்தின் படி போர்க்கடவுள் ஆகும். இந்திய புராணத்தின் படி செவ்வாய் பூமியால் வளர்க்கப்பட்டவன். போர்க்குணம் கொண்டவன். இவனின் அதிதேவதை சுப்ரமணியன் தேவர்களின் தளபதி, ரோம புராணப்படி மார்ஸ் என்பது விவசாயக் கடவுள்..

இவை எல்லாம் செவ்வாயின் நிறத்தையும், செவ்வாயில் பூமியொத்த குணத்தையும் காட்டுவதாக அமைகிறது. விஞ்ஞானிகள் கூட செவ்வாய்தான் அடுத்த பூமியாக மனிதனை தாங்கக் கூடியது என்று கருதினார்கள்.

வெளிக்கிரக வாசிகள் என்றவுடனேயே செவ்வாய் கிரக வாசிகள் என்பதுதான் முதலில் தோன்றிய கற்பனை…

புமியில் இருந்து தொலைநோக்கிகளில் செவ்வாயைக் கண்டபோது செவ்வாயில் கால்வாய்கள் இருப்பதாக நம்பினார்கள்.
செவ்வாயின் மீதான ஒளியில் பருவ கால மாற்றங்களைக் கண்டு செவ்வாயிலும் பருவ காலங்கள் உண்டு நீர் உண்டு என நம்பினார்கள்..

பாவம் செவ்வாயால் மக்களின் கற்பனைக்கு கிடைத்துக் கொண்டிருந்த தீனிகள் மரைனர் 4 என்கிற விண்வெளிக் கப்பல் 1965 ல் அனுப்பிய தகவல்களில் தவிடு பொடியாகியது. தொடர்ந்து வைகிங், மார்ஸ் பாத்ஃபைண்டர், மார்ஸ் எக்ஸ்படைசன் ரோவர்ஸ்கள் ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி, பீனிக்ஸ் ஆகிய விண் ஓடங்களும் இதர கருவிகளும் அனுப்பிய தகவல்கள் ஏமாற்றம் அளிக்கக் கூடியவையாகவே இருந்தாலும்…

செவ்வாயின் துருவப்பகுதியில் பனிக்கட்டிகளும், உறைந்த கரியமில வாயுவும் இருக்கலாம் என்பது மட்டுமே நல்ல செய்திகள்,

ஒரு காலத்தில செவ்வாயில் நீர் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் எண்ணும் அளவிற்கு சிறிது ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

செவ்வாய்க்கு இரந்து சந்திரன்கள் உண்டு.. சந்திரன் என்றதும் ரொம்ப பெரிசா கற்பனை பண்ணிடாதீங்க.

போபோஸ் என்பது 22 கிமீ விட்டமே உள்ள மிகப் பெரிய பாறை. இது செவ்வாயில் இருந்து 9000 கிமீ உயரத்தில் படுவேகமாக சுத்தி வருது.. ஆனால் பாவம் இன்னும் சில மில்லியன் ஆண்டுகளில் இது செவ்வாயின் மீது விழுந்து நொறுங்கிப் போகும்.

போபோஸ் என்றால் என்ன அர்த்தம். எங்கியோ கேட்ட மாதிரி இருக்கில்ல.. அதாங்க.. போபியா ன்னு சொல்வமே பயம்…

கொஞ்சம் கலர்ஃபுல்லா இதை குளோசப்ல பார்க்கலாமா?

வீரத்துக்கு அடையாளமான செவ்வாயின் ஒரு உப கிரகம் பயம்..

அப்போ இன்னொரு உபகிரகம் என்ன? டெய்மோஸ்.. இது 12 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட கல். இது செவ்வாயை 23000 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருது…

டெய்மோஸ் அப்படின்னா பேனிக் அப்படின்னு அர்த்தம். அதாவது உதறலெடுப்பது…

வீரம் என்பது பயமில்லாத மாதிரி நடிப்பதுன்னு குருதிப்புனல்ல கமல் சொல்வாரில்ல.. அப்படி வீரத்தைச் சுத்திச் சுத்தி வருதுங்க இந்த பயங்கள்,

அதுவும் இந்த போபியா புடிச்ச போபஸ், குணா கமல் நான் அசிங்கம் அப்படின்னு சொல்லிட்டு ரூமுக்குள்ளயே சுத்திச் சுத்தி வர்ரமாதிரி வேகமா சுத்தி வருது…

இதெல்லாம் அஸ்ட்ராய்ட் பெல்ட்டிலிருந்து செவ்வாய் லபக்கிய சில விண்கற்கள் என்று எண்ணுகிறார்கள்..

இன்னும் ஒரு தியரி இருக்கு.. சனிக்கிரகத்தைப் பார்க்கும் போது அதைப் பார்த்தா நல்லா இருக்கும்..

சரி இனிச் செவ்வாயில் இறங்கிப் பார்ப்போம்