பொன் மொழி வந்தாள்.. பொருள் கோடி தந்தாள்.

247

ஐந்து பேர் கூடியிருக்கும் இடத்தில் ஒருவர் கொட்டாவி விட்டால் மற்ற நால்வருக்கும் அனிச்சையாகக் கொட்டாவி வரும்.

வேலை இடத்தில் உற்சாகமாக வேலை செய்வோரோடு இணைகையில் நாமும் உற்சாகமாக வேலை செய்கின்றோம்.

கலகலப்பான நண்பர்களோடு உறவாடுகையில் நாமும் கலகலப்பாகின்றோம்.

தூங்கி வழியும் நபர்கள் சபையில் நாமும் தூங்கு மூஞ்சியாகின்றோம்..

ஆம்.. 

அருகிலிருப்பவர் இயல்பு சட்டென நம்மைத் தொற்றி விடுகிறது. அதே போல் நம்மியல்பு அருகிலிருப்போரைத் தொற்றி விடும்.

எனவே.. நாம் என்னவாக  விரும்புகின்றோமோ அவ்வியல்புள்ளோருடன் பழக வேண்டும்.

நாம் எதை மாற்ற விரும்புகின்றோமோ அதை நம்மியல்பாக்க வேண்டும்.

இதை உணர்ந்தவர்கள் வாழ்வுதான் சிறக்கும்.

இந்த அடிப்படையில்தான் வாழ்வில் வெற்றியடைய வேண்டுமெனில் வெற்றியாளனுக்கு அருகில் இரு என்றார்கள் நம் முன்னோர்கள்.