மாவீரர் லெப்.கேணல் குணா நினைவேந்தல்.

 

 

மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு, அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி, அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை”

-தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்

தமிழர் சேனையால் பெயர் சூடி மேற் கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் தவளை’நடவடிக்கையில் பூநகரி தமிழர் வசமாகிய நாள் 1993.11.11 ஆகும்.

மிடுக்கான எம் கவிஞன் வரிகளில் சொன்னால் “பகை வீடு சிதறுண்ட விடிசாம நேரம்….”

தென்மராட்சித் தளபதி லெப் கேணல் குணா “ஒப்பரேசன் தவளை” படை நடவடிக்கையில் வீரச்சாவு அடைந்தார் ஆதலால் அந்த மானமாவீரன் தொடர்பாக தொடர்ந்து பார்ப்போம்.

1995ஆம் ஆண்டு யாழ் வலிகாமம் பகுதியை சூரியக்கதிர் -1 இராணுவ நடவடிக்கை மூலம் முற்றுமுழுதாக
ஶ்ரீ லங்கா இராணுவம் ஆக்கிரமித்தது.

வட மகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டக்களுக்குமான பிரதான வைத்தியசாலையும் இடப்பெயர்வைச் சந்தித்தது. 🏥

யாழ் போதனா வைத்தியசாலையின் ஒரு பகுதி மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு(Base Hospital)மாற்றப்பட்டு இயங்கியது.

இன்னொரு பகுதி சாவகச்சேரி மாவட்ட வைத்தியசாலையில்(District Hospital)மேலதிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது.

வைத்தியசாலை வளாகத்தில் பின் பகுதியில் பெரியதோர் சத்திரசிகிச்சைக் கூடம் முன்னரே அமைக்கப்பட்டு நிமிர்ந்து காட்சி தந்தது.

புதியதோர் கட்டடமாகக் காணப்பட்டதால் அங்கிருந்த ஓர் வயதானவரிடம் அது தொடர்பாகக் கேட்டோம்.

“எங்கள் காவல் தெய்வமாய் இருந்த தென்மராட்சிப் பொறுப்பாளர் தம்பி குணா எமக்காகச் செய்தவை அளப்பரியவை.

அவர் மக்களிடமும் இயக்கத்திடமும் பண உதவி வாங்கி எமக்காய் கட்டியதுதான் இந்தக் கட்டிடம்” என்றார்.

1995ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தொடக்கம் 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அந்த சத்திரசிகிச்சைக் கூடம் பல நூறு பொது மக்களையும்,போராளிகளையும் காத்து நின்றதைக் கண்டேன்.

அங்கே சத்திரசிகிச்சைகளை Dr கா.சுஜந்தன் செய்து கொண்டிருந்தார்.

மயக்கமருந்து கொடுக்கும் மருத்துவராக Dr.இந்துமதி குமரேந்திரன் கடமையில் இருந்தார்.

“மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு,அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி,அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை”

என்று இமையம் வென்ற தமிழின் காவலன் சொன்ன வரிகளை நிஜம் ஆக்கியவர் எங்கள் குணா அண்ணா!👑

காணரும் வீரன் லெப் கேணல் குணா அவர்களை
“அகம்”தனில் ஆழநினைந்து
“சிரம்” தாழ்த்து
“கரம்” கூப்பி
நிமிர்வோம்!🗝