கொரியாவும் தொன் தமிழும்.

607

கொரிய மொழியில் தமிழ்ச்சொற்கள் பல கலந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரியாவை ஆண்ட தமிழரசி ஒருத்தியினால் முகிழ்ந்த விளைவே இது என்கிறார் வரலாற்றாய்வாளர் முனைவர் நா.கண்ணன்.

கங்கு எனும் கொரிய மொழியை ஆராய்ந்தபோது உயிரும் மெய்யும் கலந்துருவான தமிழின் சாயலில், தமிழ்நெடுங்கணக்கை ஒத்த எழுத்திலக்கணத்தில் இருந்ததாக இவர் பதிவு செய்கிறார்.

கொரிய எழுத்துகளின் வரி வடிவங்களில் தமிழெழுத்தின் வரிவடிவங்கள் உள்ளோடி இருப்பதை அவதானித்ததாகக் கூறுகிறார்.

கிபி 48 ஆம் ஆண்டில் மதுரை கீழடி நாகரிகத்தைச் சேர்ந்த தமிழ்ச் சமுகம் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்திருக்கு. 

அச்சமுகத்திலிருந்து ஆய குலத்தைச் சேர்ந்த ஒருத்தி கொரியாவை அடைந்து அங்கே ஒருத்தனை மணந்து காய என்கிற அரசை நிறுவி இருக்கிறாள்.

அவள் மூலம் தமிழ் அங்கே வேரூன்றி உள்ளது என்று சொல்லும் இவர் அவ்வரசி தமிழுடன் பௌத்தத்தையும் கொண்டு சென்றாள் எங்கிறார். 

ஆக, பௌத்தம் சிங்களரின் மதமில்லைங்கிறதையும் சொல்லாமல் சொல்கிறார்.

கீழே இணைக்கப்பட்ட அவருடைய உரையைக் கேளுங்கள். அழகு, அறிவு, விண்வெளி, ரொக்கெட் என தொன்மைத் தமிழனின் பெருமைகளை இயம்புகிறார்.

அவர் தொட்டு விட்டு விட்டுச் செல்லிம் விடயங்களை நாம் தொடர்ந்து சென்றால் இன்னும் பல வியப்பான விடயங்கள் எமக்குக் கிட்டும்.