காத்திருந்தோர் மனக்கரைகளில்
ஒதுங்கி இருந்தான் அவன்..
ஒதுங்கியிருந்தவன் மனக்கடலில்
ஓங்கியிருந்தது தவம்..
அறைக்கதவின் ஒவ்வொரு திறத்தலிலும்
கரைந்துகொண்டிருந்தது காத்திருந்தோர் தொகை..
அவனுக்கான திறத்தலில்
உயிர்த்துக் கொண்டன வலிகள்..
எவ்வளவு கூர்மை
“தனியாகவா வந்தீர்கள் தாத்தா”
எனும் அந்தக் கேள்விக்கு..