மனசு

233

இறைவன் மனிதர்களை படைத்து சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தார். மனிதன் மனதில் தோன்றியவைகளை செய்யத் தொடங்கினான். நடைமுறைப்படுத்தினான் ஒன்றும் அறியாத குழந்தையாக பிறந்து, உணவுக்காக அழுது, படிப்படியாக மூளை வளர பல எண்ணங்கள் ஏற்படுகிறது

எல்லோர் மூளையும் ஒரே அளவு, மாதிரி இருக்கும் போது சிந்திக்கும் திறன் மட்டும் ஏன் மாறுபடுகிறது? பூமியில் பிறக்கும் அனைவரும் ஒரே சிந்தனையைக் கொண்டிருந்தாள் ஏற்றத் தாழ்வு ஏற்படாது என எண்ணி இறைவன் படைத்திருக்கலாம். இறைவனை அறிய இதுவரை மனித மனத்தால் முடியவில்லை

மனிதர் தம் மனம் போன போக்கில் நடக்கின்றனர்.என்ன வேண்டுமானாலும் செய்யலாம், சிந்திக்கலாம் என நடக்கின்றனர். அதனால் தான் மனம் ஒரு குரங்கு போல் என சொன்னார்கள். காற்றுப் போக முடியாத இடம் கூட மனம் போகும். மிக கொடிய ஆயுதம் மனித மனமாகத்தான் இருக்க முடியும். யார் எப்போது எப்படி ஜோசிப்பர் என சொல்ல முடியாது.எவ்வளவு’ நன்மை’தீமைகள் நொடிக்கு நொடி நடக்கிறது.அனைத்துக்கும் காரணம் மனம்.

ஆணவம்’ அகங்காரம்’ கர்வம்’ பொறாமை’ வஞசகம்’ துரோகம்’ காட்டிக்கொடுப்பு இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல் அன்பு’ பாசம்’ கருணை’ பண்பு’ பணிவு’ விட்டுக்கொடுப்பு’ பெருந்தன்மை’ பொறுமை’ அமைதி என கோடிக்கணக்கான மனித மனதின் இயல்புகளை
சொல்லிக் கொண்டே போகலாம்.

பல வேளைகளில் சிந்திக்கத் தோன்றுகிறது மனம் போன
போக்கில் போய் உலகத் தொடக்கம் எண்ட ஒண்டு இருந்ததுபோல்
முடிவை நோக்கி போகிறோமோ என.இறைவன் விளையாடடை யார்தான் அறிவாரோ?
பிறந்து இறக்கும் வரை நல்ல சிந்தனை கொண்டு நல்லவர்களாக வாழ்ந்து மறைவோம்.

அன்புடன்
வ.பொ.சு—வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்