பிபோனாச்சி ( கிபி 1170 – 1240).
இத்தாலியின் பைசா நகரம் சாய்ந்த கோபுரத்தால் மட்டுமல்ல
சாயாத பல அறிவியல் உண்மைகளைத் தந்தும் பெருமை பெற்றது.
இந்நகரம் தந்தவர்தாம் இம்மைல்கல்லின் நாயகர் –
பைசாவின் லெனார்டோ. செல்லப்பெயர் – �பிபோனாச்சி.
நாம் பயன்படுத்தும் 0 – 9 என்ற 10 எண்களும் இந்தியா தந்தவை.
முதலில் இஸ்லாமிய நாடுகள், பின் ஐரோப்பா என்று
அகில உலகப்புகழ் அடைந்துவிட்டது இந்த 10 எண் கணிதமுறை.
12ம் நூற்றாண்டில் எங்கும் இந்த முறைதான் மிகப்பரபரப்பாய் புழங்கியது.சில ஆண்டுகளுக்கு முன் புற்றீசலாய்க் கிளம்பிய கணினிக் கல்வி மையங்களைப்போல
எங்கும் இந்த 10 எண் கணக்கைக் கற்றுத்தரும் நிலையங்கள்..
இந்த முறையை அந்தந்த மொழிகளில் பெயர்த்து பெயர் வாங்கினார்கள் சிலர்.இந்தக் காலகட்டத்தில்தான் முக்கியமான கணிதச் சொற்கள் பிறந்தன.
அல்-க்வார்ஸிமி என்பவர் கண்டுபிடித்த ஒரு முறைக்கு அவர் பெயரையே
வைத்தார்கள் — அதுதான் அல்கோரிதம்.
அதே போல் அரபி மொழியின் அல்-ஜாப்ர்என்பதே அல்ஜீப்ரா ஆயிற்று.
ஆகவே அல்ஜீப்ராவின் ஆரம்பம் – அரபு நாடுகள்.
இப்படி எங்கும் பரவி நின்ற கணிதக்காய்ச்சலின் உச்சத்தில்தான்
நம் �பிபினோச்சி – லிபர் அபேக்கி என்ற புதுக்கணிதத் தொகுப்பு நூலை வெளியிட்டார்.�பிபினோச்சி இந்நூலை எழுதியது காலத்தின் கட்டாயம்.
மரபுக்கவிதையிலிருந்து வெளிவரத்துடித்தவர்கள் புதுக்கவிதையை எழுதியது போல…
அவரின் தொழிலே கணக்குதான்.. சில்லறைக்கணக்கல்ல-
பெரும் தொழிலதிபர்களின் பெரிய பெரிய வருமானக்கணக்குகள்.
கணக்காளர்களுக்குப் பயிற்சி கொடுத்து உருவாக்கும்
பேராசிரியராகவும் அவர் இருந்தார் .
?உலகின் முதல் அக்கவுண்ட்டன்ஸி கல்லூரி?????பணக்கணக்கு மட்டுமல்லாமல், கடலில் கப்பலேறிப்போவோரின்
பயணக்கணக்கும் அன்றைய முக்கியத் தேவையாய் இருந்தது.
இடங்கள், இடைப்பட்ட தூரம், கப்பலின் வேகம், காற்றின் விசை
என பல கூறுகளை வைத்துச் சிக்கலான விடை கண்டு சொல்லும்
சவாலையும் �பிபினோச்சி விரும்பிச் செய்தார்.இப்படி
பெருங்கணக்கு போடுதல்
கணக்கர்களைப் பயிற்றுவித்தல்
கடற்பயணக் கணக்குகள்
எனப் பன்முக வித்தகராய் விளங்கிய அந்த கணிதப்புலி
அறிந்ததைத் தொகுத்து உயர்ந்ததில் ஆச்சரியமில்லை.
சொல்லித்தர எண்ணும் ஆசிரியர் புகழ்
விண்ணைத் தொட்டதில் வியப்பில்லை.அதுவரை 10 எண்களையும், அடுத்து கட்டளை வாக்கியங்களை முழுதாய் எழுதி
கணக்குப் போட்டுக்கொண்டிருந்த உலகத்தை
அல்ஜீப்ரா மூலம் அடுத்த நிலைக்கு உயர்த்திய மேதை இவர்.
இந்தக் கணக்கின் பரிணாமம் பின்னாளில் நியூட்டன் போன்றோருக்கெல்லாம்
எத்தனைப் பயன்பட்டது.
அப்படிப்பட்ட ஏணி அமைத்துத் தந்த ஆசிரியர் �பிபினோச்சியை
இந்த மைல்கல்லின் நாயகராய் கொண்டாடுவோம்.அல்ஜீப்ரா பற்றி இன்னும் அறிய –